சமீபத்தில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். பல நோய்களுக்கு எதிராக இத்தகைய மருந்துகள் பயனற்றவையாகி வருவதாக ஆய்வுகள் காட்டுவதைத் தொடர்ந்து, இது ஒரு கவலைக்குரிய விஷயம் என்று அவர் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய மருத்துவரும், முன்னாள் எய்ம்ஸ் இயக்குனருமான ரந்தீப் குலேரியா, பிரதமர் மோடி ‘நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி’ எனும் முக்கியமான தலைப்பைப் பற்றி விவாதித்துள்ளார்.