AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“இலவச திட்டங்களால் தாறுமாறாக அதிகரிக்கும் கடன் சுமை!”.. நிர்மலா சீதாராமன் கவலை!!

Finance Minister Nirmala Sitharaman: இலவசத் திட்டங்களால் பல்வேறு மாநிலங்களின் கடன் சுமை தாறுமாறாக அதிகரித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய அவர், மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும் என்றும், ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

“இலவச திட்டங்களால் தாறுமாறாக அதிகரிக்கும் கடன் சுமை!”.. நிர்மலா சீதாராமன் கவலை!!
நிர்மலா சீதாராமன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Sep 2026 12:10 PM IST

புதுச்சேரி, செப்.26: நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் தேர்தல் வாக்குறுதிகளாகவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் பலவிதமான இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. எவ்வித நிதித் திட்டமிடலும் இன்றி அறிவிக்கப்படும் இத்தகைய கட்டற்ற இலவசத் திட்டங்கள், மாநிலங்களின் நிதி ஆதாரத்தைப் பெருமளவில் பாதிப்பதுடன், எதிர்காலக் கடன் சுமையையும் கட்டுக்கடங்காமல் உயர்த்துகிறது என்ற விமர்சனம் நீண்டகாலமாகவே நிலவி வருகிறது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலவசத் திட்டங்களால் மாநிலங்களின் நிதிநிலைமை சீர்குலைந்து கடன் சுமை தாறுமாறாக அதிகரித்து வருவதாகத் தனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய அளவில் முதலிடத்தில் தமிழ்நாடு.. ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் சாதித்து காட்டிய முதல்வர் விஜய்!!

நலத்திட்டங்கள் Vs இலவசங்கள்:

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உண்மையான நலத்திட்டங்களுக்கும், அரசியல் காரணங்களுக்காகத் தரப்படும் இலவசத் திட்டங்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார். போதுமான வருவாய் ஆதாரங்களை உருவாக்காமல், வரவு செலவுத் திட்டத்தில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இலவசங்களை வாரி வழங்குவதால் பல மாநிலங்கள் கடும் நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக அவர் கவலை தெரிவித்தார். மாநில அரசுகள் தங்களின் வருவாயைப் பெருக்கும் வழிகளை ஆராயாமல், கடன்களை வாங்கி இலவசங்களைச் செயல்படுத்துவது நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றும் அவர் எச்சரித்தார்.

வரி நிர்வாகம், “வரி பயங்கரவாதம்” முத்திரை:

மாநிலங்களின் நிதி நிர்வாகம் மற்றும் வரி வசூல் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர், முறைகேடான வரியேப்புகளைத் தடுக்கவும், வரி வசூலை முறைப்படுத்தவும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, அதனைச் சிலர் “வரி பயங்கரவாதம்” என்று முத்திரை குத்துவது மிகவும் தவறான அணுகுமுறை என்று குறிப்பிட்டார். நேர்மையாக வரி செலுத்துவோரைப் பாதுகாக்கவும், அரசுக்குச் சேர வேண்டிய நியாயமான வருவாயை உறுதி செய்யவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்தவே உதவும் என அவர் விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க: திருவண்ணாமலை புரட்டாசி பௌர்ணமி கிரிவலம்.. சொந்த ஊர் திரும்ப போதிய பேருந்து, ரயில் வசதியின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் திண்டாட்டம்!

யுபிஐ கட்டண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் யுபிஐ கட்டணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்கும் மத்திய நிதியமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தார். சாமானிய மக்கள் பயன்படுத்தும் 2,000 ரூபாய்க்கும் குறைவான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எவ்விதக் கட்டணமும் விதிக்கப்படவில்லை என்றும், வாடிக்கையாளர்கள் மீது எந்தவொரு கூடுதல் சுமையும் சுமத்தப்படாது என்றும் அவர் உறுதியாகத் தெளிவுபடுத்தினார். வணிகர்கள் மற்றும் நிதி அமைப்புகளுக்கு இடையிலான உள் கட்டண முறைகளான எம்டிஆர் குறித்துப் பரப்பப்படும் தவறான தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Follow Us