முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி டூ நீதிபதி.. தவெகவில் இணைந்த முக்கிய நபர்கள்.. பொறுப்பு கொடுத்த விஜய்!
tamilaga vettri kazhagam : தமிழக வெற்றிக் கழக கட்சியில் அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இணைந்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளனர்.

சென்னை, ஜூன் 10 : தமிழக வெற்றிக் கழக கட்சியில் (Tamilaga Vettri Kazhagam) முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் (EX IRS Officer Arunraj) இணைந்துள்ளார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜய் (tvk vijay) முன்னிலையில் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்துள்ளது. இதில் குறிப்பாக, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 2024ஆம் ஆண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய வேகத்திலேயே, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், அவ்வப்போது கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருவதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தவெகவில் இணைந்த முக்கிய நபர்கள்
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நபர்கள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது முக்கியவர்கள் இணைந்துள்ளனர். அதன்படி, முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்துள்ளார்.




குறிப்பாக, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் மற்றும் திமுக, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கட்சியில் விஜய் தலைமையில் இணைந்துள்ளனர். இதில், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜுக்கு கொள்கை பரப்புச் பொதுச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
இவர் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, கழக கொள்கைகள், கொள்கை சார்ந்த செயல்திட்ட பணிகளை மேற்கொள்வதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜலட்சுமி, ஸ்ரீதரன், திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன், டாக்டர் என்.மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சி.சுபாஷ் ஆகியோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
பொறுப்பு கொடுத்த விஜய்
— TVK Vijay (@TVKVijayHQ) June 9, 2025
இதில் முக்கியமானதாக முன்னாள் நீதிபதி, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி இணைந்தது பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களின் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை உட்கட்டமைப்பு போதுமானது இல்லை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக, கட்சியை பலப்படுத்த சரியான தலைவர்களும் இல்லை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இதனை பலப்படுத்தும் வேலைகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படியான சூழலில், முக்கிய நபர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இவர்கள் பலப்படுத்தும் பணியில் புதிதாக இணைந்த ஐஆர் அதிகாரி அருண்ராஜ் மட்டுமின்றி முன்னாள் எம்எல்ஏக்கள் பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது