போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு… சினிமா இயக்குநர் உட்பட 4 பேர் கைது – சென்னையில் அதிர்ச்சி

Chennai Drug Bust : சென்னையில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் சினிமா இயக்குநர் உட்பட 4 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சென்னையில் பலருக்கு போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு... சினிமா இயக்குநர் உட்பட 4 பேர் கைது - சென்னையில் அதிர்ச்சி

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர்

Published: 

22 Sep 2025 15:45 PM

 IST

சென்னையில் போதைப் பொருட்களை தடுக்கும் விதமாக தொடர்ச்சியாக போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் (Srikanth) போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்படிருந்த நிலையில், வானகரம் காவல் நிலையத்தின் எலைக்குட்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளை வைத்திருந்ததாக செப்டம்பர் 22, 2025 அன்று சினிமா இயக்குநர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் அவர்களிடம் எப்படி வந்தது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இயக்குநர் உட்பட 4 பேர் கைது

கடந்த செப்டம்பர் 18, 2025 அன்று சென்னையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்ததாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் சிலருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையும் படிக்க : அண்ணிக்களுடன் அத்துமீறிய தொடர்பு.. இளைஞர் கழுத்தறுத்து கொலை

இதனையடுத்து சென்னை வானகரம் அருகே 5 கிராம் பெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் சினிமா இயக்குநர் பிரபாகரன், பவன் குமார், ஆஷிக் பாஷா, ஆறுமுகம் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன், 12 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் பல்வேறு நபர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்தது தெரியவந்தது.

சென்னையில் அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்?

இதனையடுத்து போதைப்பொருள் வழக்கில் சினிமா இயக்குநர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது கடந்த சில நாட்களுக்கு முன் போதைப்பொருள் வழக்கில் சினிமா நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் சென்னையில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்திருப்பதை நமக்கு வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாந்திடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் மூலம் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.

இதையும் படிக்க : Cuddalore: காதலனுடன் பிரச்னை.. வீடியோ கால் பேசும்போது பெண் தற்கொலை

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்பட்டதில், ஸ்ரீகாந்தின் நண்பர்கள் எனக் கூறப்படும் பிரதீப் மற்றும் கெவின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  அதேபோல், இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தேடிவந்த நிலையில், கிருஷ்ணா தானாகவே சரணடைந்தார்.