தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்.. பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால், சுய மருத்துவம் செய்ய வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஜூலைக்குப் பிறகு காய்ச்சல் அதிகரிப்பது இயல்பு என்றாலும், தற்போது பல்வேறு வைரஸ் தொற்றுகள் பரவி வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்.. பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

காய்ச்சல் பாதிப்பு

Updated On: 

04 Sep 2025 10:58 AM

 IST

தமிழ்நாடு, செப்டம்பர் 4: தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுய மருத்துவம் செய்ய வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக ஜூலை மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்குவதால் இந்த காலகட்டத்தில் சீசன் நோய்கள் என சொல்லப்படும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் சமீப காலமாக தமிழகம் முழுவதும் வெயில் மற்றும் மழை என காலநிலை சீராக இல்லாத காரணத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தினந்தோறும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சிகிச்சைக்காக நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.  இப்படியான நிலையில் சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் அச்சப்பட வேண்டாம்

அதில் ஜூலை மாதத்திற்கு பிறகு காய்ச்சல் பாதிப்பு காலநிலை மாற்றத்தால் அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான் எனவும், தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலை வைரஸ் வாழ தகுதியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்சமயம் தமிழகத்தில் காய்ச்சலால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதையும் படிங்ககாய்ச்சல் காலத்தில் இளநீர் குடிக்கலாமா? – மருத்துவர்கள் சொல்வது என்ன?

காரணம் இப்போது பல வகை வைரஸ் நோய் உள்ளது.  h1n1 இம்ப்ளுயன்சா போன்ற வைரஸ் இந்த காலத்தில் அதிகமாக தாக்கலாம். இந்த வைரஸ் தொற்றால் சளி, உடல் வலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இணை நோய் இல்லாதவர்களுக்கு குறைந்தது மூன்று நாட்கள் முதல் அதிகபட்சம் ஒரு வாரத்தில் பாதிப்புகள் சரியாகிவிடும். ஒருவேளை காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் வீட்டிலேயே சுய மருத்துவம் செய்யக்கூடாது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் ஆகியோர் வைரஸ் தாக்குதலால் வெகுவிரைவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பதுடன் சுத்தமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெருங்கும் மழைக்காலம்.. காய்ச்சல், அஜீரண பிரச்சனை வராமல் தடுப்பது எப்படி?

மாஸ்க் அணிய அறிவுறுத்தல்

இதற்கிடையில் சென்னை, மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் கடந்த இரண்டு வார காலமாக வைரஸ் காய்ச்சல் பரவல் சற்று அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. இதனை முன்னிட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், கர்ப்பிணிகள் குழந்தைகள் ஆகியோர் கூடுமானவரை மக்கள் அதிகமாக புழங்கும் இடத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.