அரசு வால்வோ குளிர்சாதன சொகுசு பேருந்து…பல்வேறு வசதிகள்…டிக்கெட் கட்டணம்…முழு விவரம் இதோ!
Fare Announcement For Volvo Buses : சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்த 20 வால்வோ பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் மற்றும் அந்த பேருந்துகளில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
சென்னையில் 20 நவீன வால்வோ குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று புதன்கிழமை ( டிசம்பர் 24) தொடங்கி வைத்தார். இந்த பேருந்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. இதில், பேருந்தின் பின் பகுதியில் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கண்டக்டர், பயணிகள் ஆகியோருக்கு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. 51 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்தில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு கால் வலி ஏற்படாமல் இருப்பதற்கு புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தானது முழுவதும் ஆட்டோமேட்டிக் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. டிரைவரின் முன் பகுதியில் டிஜிட்டல் மீட்டர் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்தில் எந்த வகையான தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டாலும் இந்த டிஜிட்டல் பலகையில் காண்பிக்கப்படும்.
ஆட்டோமேட்டிக் கியர்-கிளட்ச்
மேலும், பேருந்தின் உள்ளே கண்காணிப்பு கேமரா, தீயணைப்பான் கருவி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில், பேருந்தின் பின்புறம் உள்ள என்ஜினில் ஏதாவது தீ விபத்து அல்லது அதிகமான வெப்பம் வெளியேறினால் தீயணைப்பான் கருவி தானாகவே செயல்பட்டு தீயை அணைத்து விடும். இதனால், பேருந்தில் பெரிதளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்படும். மற்ற அரசு பேருந்துகளுடன் ஒப்பிடுகையில் இந்த வால்வோ பேருந்தில் ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளட்ச் ஆகியவை உள்ளன. அதாவது 12 கியர்கள் உள்ளன.
மேலும் படிக்க: 6வது நாளாக நடந்த செவிலியர்கள் போராட்டம்.. வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!!
முழு கண்காணிப்பில் இயங்கும் வால்வோ பேருந்து
பேருந்தின் உள்ளே ஓட்டுநர் பகுதி, பயணிகள் இருக்கை பகுதி, பேருந்தின் முன் புறம் மற்றும் பின் புறம் என 4 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பேருந்து முழு கண்காணிப்பில் இயக்கப்படும். மேலும், பேருந்து ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களின் செயல்பாடுகளை ஓட்டுனர் தனது இருக்கையில் இருந்தவாறு கண்காணிக்க முடியும். தற்போது, இந்த பேருந்தானது சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
வால்வோ சொகுசு பேருந்தின் டிக்கெட் கட்டணம்
அதாவது, சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இந்த பேருந்து சென்று வருகிறது. மற்ற பேருந்துகளுடன் ஒப்பிடுகையில் இந்த பேருந்துக்கான பயணம் நேரம் மொத்த மணி நேரத்தில் ஒரு மணி நேரம் குறைவாகும். தற்போது, இந்த பேருந்துக்கான டிக்கெட் கட்டணம் வெளியாகி உள்ளது. இதில், சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 790, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.1,080, சென்னையில் இருந்து சேலத்துக்கு ரூ. 575, கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.880, சென்னையில் இருந்து திருப்பூருக்கு ரூ. 800, திருச்சியில் இருந்து சென்னைக்கு ரூ.565 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வரை போராட்டம் ஓயாது…வேலூர் இப்ராஹிம்!



