Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வரை போராட்டம் ஓயாது…வேலூர் இப்ராஹிம்!

Thiruparankundram Deepathoon Lamp Protest: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் வரை போராட்டம் ஓயாது என்று பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவின் செயலர் வேலூர் இப்ராஹீம் தெரிவித்தார். இதில், திமுக உள்ளிட்ட கட்சிகள் சதி செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வரை போராட்டம் ஓயாது…வேலூர் இப்ராஹிம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 24 Dec 2025 16:12 PM IST

இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சரியான அறிக்கையை திமுக அரசு அளிக்கவில்லை. இதன் மூலம் தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் டீசல் லிட்டருக்கு ரூ. 4 குறைப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்வதாகவும், அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால், இதில் ஒன்றை கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் கூறுவதை நிறுத்த வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பலத்த அடியை பாஜக வழங்கும்.

பூர்ண சந்திரன் தற்கொலையை கொச்சைப்படுத்தும் திமுக

தனது உயிரை மாய்த்தாவது திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஒரு உன்னதமான காரணத்துக்காக தனது உயிரை பூர்ண சந்திரன் மாய்த்து உள்ளார். இதனை, குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக திமுக தவறாக பேசினால் அதற்கு தமிழக மக்கள் தக்க பதிலடி வழங்குவார்கள். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவதற்காக பல ஆண்டுகளாக ஹிந்துக்கள் போராடி வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் போலி மருந்துகள் குறித்து புகார் அளிக்க புதிய நடைமுறை!

இந்துக்கள் வழிபாட்டுக்கு காவல்துறை மூலம் இடையூறு

தமிழகம் என்பது ஆன்மீக பூமியாகும். 85% ஹிந்துக்கள் இருக்கின்ற பூமியாகும். ஆனால், அவர்களின் வழிபாட்டுக்கு எதிராக காவல் துறையை வைத்து திமுக அரசு இடையூறு செய்து வருகிறது. 40 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் காவல்துறையை வைத்து தடுத்துள்ளனர். திமுக ஆட்சியானது இந்துக்கள், தமிழக கலாச்சாரத்துக்கு எதிரானதாகும்.

இந்துக்கள்-இஸ்லாமியர்கள் ஒன்றிணையக்கூடாது

இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்றிணையக் கூடாது என்பதற்காக பழைய இஸ்லாமிய அடிப்படை வாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் ஊக்குவிக்க கூடிய பயங்கரவாத சக்தியான எஸ்டிபிஐ, முஸ்லிம் லீக், தமுமுக ஆகிய கட்சிகள் ஆட்டு இறைச்சியை தோளில் சுமந்து கொண்டு திருப்பரங்குன்றம் மலை மீது செல்கின்றனர். இதற்கு காவல் துறை அனுமதி அளிக்கிறது. ஆனால், இந்துக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுத்து வருகிறது. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது உறுதி. அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு ரொக்கப்பரிசு உறுதி.. எவ்வளவு கிடைக்க வாய்ப்பு?