Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

6,100 கிலோ எடை.. சாதனை படைத்த பாகுபலி ராக்கெட்.. கவனிக்க வேண்டிய டாப் 5 பாய்ண்ட்ஸ்!

தனியார் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது சக்திவாய்ந்த ராக்கெட் ஆன LVM3-M6 மூலம் BlueBird Block-2 என்ற அடுத்த தலைமுறை கம்யூனிகேஷன் செயற்கைக்கோளை இன்று காலை விண்ணில் ஏவியது.

6,100 கிலோ எடை.. சாதனை படைத்த பாகுபலி ராக்கெட்.. கவனிக்க வேண்டிய டாப் 5 பாய்ண்ட்ஸ்!
விண்ணில் பாய்ந்தது பாகுபதி ராக்கெட்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Dec 2025 10:38 AM IST

அமெரிக்க செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் பாகுபலி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது தனியார் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது சக்திவாய்ந்த ராக்கெட் ஆன LVM3-M6 மூலம் BlueBird Block-2 என்ற அடுத்த தலைமுறை கம்யூனிகேஷன் செயற்கைக்கோளை இன்று காலை விண்ணில் ஏவியது. இதுவரை இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக இது இருக்கும். சுமார் 6,100 கிலோ எடை கொண்ட ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.

இதையும் படிங்க : வைகுண்ட ஏகாதசி…. திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – வெளியான தகவல்

ப்ளூபேர்ட்- 6 செயற்கைக்கோள்:

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST Space Mobile நிறுவனம் வடிவமைத்துள்ள ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளின் எடை சுமார் 6,100 கிலோ ஆகும். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்:

இதுவரை இஸ்ரோ விண்ணில் அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இதுவாகும். இதுபோன்ற அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்னதாக பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவின. தற்போது, இவ்வளவு எடைகொண்ட செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ ஏவியுள்ளது. விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அரையாண்டு விடுமுறை – பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை – விவரம் இதோ

இஸ்ரோவின் ஆறாவது LVM3 ராக்கெட்:

இந்தச் செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் LVM3 ராக்கெட், இஸ்ரோவின் ஆறாவது LVM வகை ராக்கெட்டாகும். சுமார் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்ட ராக்கெட்டில் திட, திரவ மற்றும் கிரையோஜனிக் அடுக்குகள் உள்ளன. சந்திரயான் விண்கலமும் இதே LVM3 ராக்கெட் மூலம் ஏவப்பட்டிருந்தது.