விண்ணில் ஏவப்பட தயார் நிலையில் பாகுபலி ராக்கெட்.. இன்று காலை கவுண்ட்டவுன் தொடங்குகிறது!
Countdown Starts From Today Morning For Bahubali Rocket | இஸ்ரோ நாளை (டிசம்பர் 24, 2025) பாகுபலி ராக்கெட்டை விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (டிசம்பர் 23, 2025) காலை 8.45 மணி முதல் தொடங்க உள்ளது.
சென்னை, டிசம்பர் 23 : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO – Indian Space Research Organization), நாளை (டிசம்பர் 24, 2025) பாகுபலி ராக்கெட்டை (Bahubali Rocket) விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட்டுக்கான கவுண்டவுன் இன்று (டிசம்பர் 23, 2025) தொடங்குகிறது. அமெரிக்காவை (America) சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செயற்கைக்கோளை இந்த ராக்கெட் கொண்டு செல்ல உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ள இந்த பாகுபலி ராக்கெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாளை விண்ணில் ஏவப்பட உள்ள பாகுபலி ராக்கெட்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை (டிசம்பர் 24, 2025) காலை சரியாக 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. விண்ணில் ஏவப்பட உள்ள இந்த எல்.வி.எம்.3 – எம்.6-ல் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட புளூபேர்ட் – 6 என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ஜம்மு & காஷ்மீரில் நிலவும் மோசமான வானிலை.. 11 விமானங்கள் ரத்து!
பாகுபலி ராக்கெட்டுக்கு இன்று தொடங்கும் கவுண்ட்டவுன்
நாளை விண்ணில் ஏவப்பட தயாராக உள்ள இந்த ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ராக்கெட் மற்றும் அது சுமந்து செல்லும் செயற்கைக்கோள் ஆகியவற்றின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் குழு மிக தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதையும் படிங்க : 99% மாவட்டங்களில் 5G சேவை.. தொலைத்தொடர்பில் மத்திய அரசின் புதிய சாதனை
ஒவ்வொரு ராக்கெட்டும் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்னதாக அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கப்படும். அந்த வகையில் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள இந்த பாகுபலி ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது. நாளை காலை சரியாக 8.45 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ள இந்த ராக்கெட்டுக்கு சரியாக இன்று காலை 8.54 மணிக்கு இந்த ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்டவுன் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.