ஜம்மு & காஷ்மீரில் நிலவும் மோசமான வானிலை.. 11 விமானங்கள் ரத்து!
11 Flights Cancelled In Srinagar | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக மோசமான வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக அங்கு 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர், டிசம்பார் 21 : இந்தியாவில் குளிர் காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் நிலவும் நிலையில், சில இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அந்த வகையில் காஷ்மீர் (Kashmir) பள்ளத்தாக்கின் மேல் பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை பெய்ததை தொடர்ந்து ஸ்ரீநகர் (Srinagar) விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்ட 11 விமானங்கள்
ஸ்ரீநகரில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் சில முக்கிய தகவல்களை கூறியுள்ளார். அதாவது, மோசமனான வானிலை காரணமாக இன்று (டிசம்பர் 21, 2025) ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரின் உயரமான பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க : ரூ.10-க்காக முதியவரை குத்தி கொலை செய்த சிறுவன்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
வானிலை காரணமாக விமான போக்குவரத்து சேவை பாதிப்பு
#WATCH | J&K | Winter’s first showers break Udhampur’s three-month dry spell. IMD has issued a yellow alert in the district, forecasting ‘generally cloudy sky with a few spells of rain or thundershowers’. pic.twitter.com/51iZKlJ8aW
— ANI (@ANI) December 21, 2025
ஜம்மு மற்றும் காஷ்மீர், டெல்லி விமான நிலையங்களில் நிலவிய மிக மோசமான வனிலை காரணமாக ஸ்ரீநகர் செல்லவிருந்த இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வானிலை சீரடைவதை பொறுத்து விமான சேவைகள் மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ED Raid : ஒரே நாளில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
இவ்வாறு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் மிக கடுமையான பனிப்பொழிவு நிலவும் நிலையில், அங்கு பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.