ஏப் 23-ல் வாக்களிக்க இலவச போக்குவரத்து வசதி.. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Free Transportation Facility On Election Day | தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தேர்தல் அன்று வாக்களிக்க முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து சேவை வழங்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏப் 23-ல் வாக்களிக்க இலவச போக்குவரத்து வசதி.. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

20 Apr 2026 18:09 PM

 IST

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. தேர்தலை சிறப்பான முறையில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் (ECI – Election Commission of India) தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் அன்று முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இலவச போக்குவரத்து வசதியை சென்னை மாவட்ட நிர்வாக அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ளும் தமிழகம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எந்த வித சிக்கல்களும் இன்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் தான் சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தேர்தல் நாளன்று வாக்களிக்க ஏதுவாக போக்குவரத்து வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : யார் யாருக்கு டெபாசிட் திரும்பக் கிடைக்கும்? முழு விவரம் இதோ!

சேவையை பெற விண்ணப்பிப்பது எப்படி?

இந்த சேவையை பெற வாக்காளர்கள் பல முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

  • சக்ஷம் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • 1950 என்ற மாவட்ட உதவி எண் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • 1800-425-7012 என்ற கட்டுப்பாட்டு அறை எண் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றி மிக எளிதாக இந்த சேவையை பெற விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க : தவெக தலைவர் விஜய்யின் தலை மீது பட்டு தெறித்த பாட்டில்.. அதிர்ச்சியில் உறைந்த பவுன்சர்கள்!

தடையின்றி வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு

2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தரப்பினரும் தடையின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் மேகொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சிரமமின்றி வாக்களிக்க செல்வதை உறுதி செய்யும் வகையில் இதற்காக பிரத்யேக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..