AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பஹல்காமில் பாதுகாப்பை உறுதிப்படுத்த QR கோடு உடன் அடையாள அட்டை.. முக்கிய நடவடிக்கை!

ID Card With QR Code Introduced In Pahalgam | ஜம்மு மற்றும் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா உதவியாளர்களுக்கு கியூஆர் கோடு உடன் ஐடி கார்டு வழங்கப்பட உள்ளது.

பஹல்காமில் பாதுகாப்பை உறுதிப்படுத்த QR கோடு உடன் அடையாள அட்டை.. முக்கிய நடவடிக்கை!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Apr 2026 19:43 PM IST

பஹல்காம், ஏப்ரல் 20 : ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான பஹல்காமில் (Pahalgam) பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் வலுப்படுத்தியுள்ளனர். 2025 ஆம் ஆண்டு பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்கள் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்தவும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பஹல்காமில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதி, இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அங்கு சுற்றுலா செல்கின்றனர். அந்த வகையில், 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் இருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது.

இதையும் படிங்க : மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி உரை

இந்த கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு பஹல்காமுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இந்த நிலையில் தான், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுற்றுலா தளங்களில் உள்ளவர்களுக்கு கியூஆர் கோடு உடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

கியூஆர் கோடு உடன் கூடிய அடையாள அட்டை – முக்கியத்துவம் என்ன?

பஹல்காம் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளதால் அங்கு குதிரை பராமரிப்பாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள், தெருவோர வியாபாரிகள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் இதர சுற்றுலா பயணிகளுக்கான சேவைகளை வழங்கும் உள்ளூர் வாசிகள் இருப்பர். இந்த நிலையில், அவர்களுக்கு கியூஆர் கோடு உடனான அடையாள அட்டையை அதிகாரிகள் வழங்க உள்ளனர். அந்த அடையாள அட்டையில் உள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி அதிகாரிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் சோதனை செய்வார்கள்.

இதையும் படிங்க : தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. பெரும்பான்மை கிடைக்காததால் நிறைவேறவில்லை

இந்த அடையாள அட்டைகள் மூலம் சுற்றுலா பயணிகள் தாங்கள் பாதுகாப்பாக தான் உள்ளோம் என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.

Follow Us