மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபடுகிறார்.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
Arvind Kejriwal to support MK Stalin: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன். அந்த வகையில் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 20, 2026 அன்று தமிழ்நாடு வந்துள்ளார்
சென்னை, ஏப்ரல் 20: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பரப்புரை செய்வதற்காக தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசிய அரவி்ந்த் கெஜ்ரிவால்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன். இதன் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 20, 2026 அன்று தமிழ்நாடு வந்துள்ளார். இதனையடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் போல ஒரு தலைவர் கிடைக்க மாட்டார். அவர் தமிழ்நாட்டுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபடுகிறார். அவர் எந்த வித ஈகோவும் இல்லாதவர். அதனால் தான் அவருக்காக நான் பரப்புரை செய்கிறேன்.
மேலும் பேசிய அவர், பாஜகவின் பிடியில் அதிமுக இருக்கிறது. பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை தான் அதிமுகவுக்கு ஏற்படும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பை இந்தியாவே கண்டது. கல்விக்காக அவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்று பேசினார்.