திமுக – தவெக இடையே உள்குத்து… வில்லிவாக்கம் சஸ்பென்சை உடைத்த ஜோஸ் சார்லஸ்…!
வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளர்களை சந்தித்தபோது, “வில்லிவாக்கத்தில் அண்ணன் எஸ்.ஆர்.விஜயகுமார் நீண்ட காலத்திற்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அவரது இயல்பான குணமும், பண்பும் மக்களுக்கு தெரியும். இதுமட்டுமின்றி, எஸ்.ஆர்.விஜயகுமார் திறமையும், ஏற்கனவே எம்.பியாக பதவியும் வகித்துள்ளார். இதனால், வில்லிவாக்கம் தொகுதி வளர்ச்சிக்கு அமோகமாக செயல்படுவார். திமுகவும் தவெகவும் ஏ டீம், பி டீம் மாதிரி நண்பர்களாக உள்ளனர். இதை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காகதான் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். இதன் காரணமாக, வில்லிவாக்கம் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாருக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதிமுக மாபெரும் வெற்றியடையும்” என்று தெரிவித்தார்.
வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளர்களை சந்தித்தபோது, “வில்லிவாக்கத்தில் அண்ணன் எஸ்.ஆர்.விஜயகுமார் நீண்ட காலத்திற்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அவரது இயல்பான குணமும், பண்பும் மக்களுக்கு தெரியும். இதுமட்டுமின்றி, எஸ்.ஆர்.விஜயகுமார் திறமையும், ஏற்கனவே எம்.பியாக பதவியும் வகித்துள்ளார். இதனால், வில்லிவாக்கம் தொகுதி வளர்ச்சிக்கு அமோகமாக செயல்படுவார்.
திமுகவும் தவெகவும் ஏ டீம், பி டீம் மாதிரி நண்பர்களாக உள்ளனர். இதை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காகதான் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். இதன் காரணமாக, வில்லிவாக்கம் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாருக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதிமுக மாபெரும் வெற்றியடையும்” என்று தெரிவித்தார்.
