டெல்லியில் ஒரு வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை.. கில்லாடி கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
1 Crore Rupees Theft In House In Delhi | டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், கொள்ளை கும்பலை கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி, ஏப்ரல் 19 : தலைநகர் டெல்லியில் (Delhi) பல நாட்களாக திட்டமிட்டு ஒரு வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் உள்ளிட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பல நாட்களாக பூட்டி இருக்கும் வீடுகளில் புகுந்து இந்த கும்பல் கொள்ளை அடித்து வந்த நிலையில், போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை போலீசார் கைது செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பூட்டி இருந்த வீட்டில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை
டெல்லியில் உள்ள மது விகார் நகரில் உள்ள ஆர்யா நகர் குடியிருப்பில் ஒரு வீட்டில் கொள்ளை நடைபெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக போலீசார், தீவிர சோதனை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். ஆனால் , அவர்களுக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் போலீசார் தங்களது அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : தொகுதி மறுவரையறை.. மக்களவையில் சரமாரி கேள்விகளை முன்வைத்த திமுக எம்பி கனிமொழி!




அதாவது சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர்கள் தூரம் தள்ளி சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பப்லூ என்ற கலுவா மற்றும் ராம்பால் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விசால் என்ற நபர் குறித்து தெரிய வந்துள்ளது. அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் அதிரடி கைது
அதுமட்டுமன்றி இந்த விவகாரத்தில் மேலும் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்கள் கொள்ளையடித்த பொருட்களில் இருந்து பெரும் பகுதியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அப்போது கொள்ளையடித்த மீத நகைகளை அவர்கள் தங்களது குடும்பத்தாரிடம் கொடுத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : 5 வயது பேத்தியை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட பாட்டி.. அதிர்ச்சி சம்பவம்!
அவர்கள் அந்த வீட்டில் இருந்து கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்றும், இந்த கும்பல் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாகிவிடும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.