திமுக ஆட்சியில் எந்தெந்த துறையில் எவ்வளவு ஊழல்…ஆதாரத்துடன் பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி!

DMK Government Corruption: திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எந்தெந்த துறைகளில் எவ்வளவு ஊழல் நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பான ஆதரங்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இதில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கூறினார்.

திமுக ஆட்சியில் எந்தெந்த துறையில் எவ்வளவு ஊழல்...ஆதாரத்துடன் பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல் பட்டியல்

Updated On: 

06 Jan 2026 14:04 PM

 IST

திமுக ஆட்சியில் எந்தெந்த துறையில் எவ்வளவு ஊழல் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியலை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் நிகழ்ந்துள்ளது ஊழல் குறித்த பட்டியலை தமிழக ஆளுநர் ஆர். என். ரவியிடம் வழங்கியுள்ளோம். கடந்த 4.5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். கடந்த 56 மாதங்களாக திமுக அரசு மிகப் பெரிய அளவில் கொள்ளை அடித்து தமிழகத்தை கடன் சுமையில் தள்ளி உள்ளது. ஏற்கனவே இருந்த கடனை விட தற்போது திமுக ஆட்சியில் 4.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. திமுக அரசு ஊழல் செய்வதை தவிர தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

திமுக ஆட்சியில் துறைகள் வாரியாக நடைபெற்ற ஊழல்

இதில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள் ரூ.64 ஆயிரம் கோடி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ரூ.60 ஆயிரம் கோடி, சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையில் ரூ.60 ஆயிரம் கோடி, எரிசக்தி துறையில் ரூ.55 ஆயிரம் கோடி, கலால் வரி துறையில் ரூ.50 ஆயிரம் கோடி, பத்திரப்பதிவுத் துறையில் ரூ.20 ஆயிரம் கோடி, நெடுஞ்சாலை துறையில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றது.

மேலும் படிக்க: ‘என்னை நம்பி பல உசுரு வருது’.. கடமையை செய்த ரயில்வே கேட் ஊழியர்.. தஞ்சாவூரில் பரபர சம்பவம்!

நீர் ஆதாரம் துறையில் ரூ.17 ஆயிரம் கோடி

இதேபோல, நீர் ஆதாரம் துறையில் ரூ.17 ஆயிரம் கோடி, சென்னை மாநகராட்சியில் ரூ.10 ஆயிரம் கோடி, தொழில் துறையில் ரூ.8 ஆயிரம் கோடி, பள்ளி கல்வித்துறையில் ரூ.5 ஆயிரம் கோடி, மக்கள் நல்வாழ்வு துறையில் ரூ.5 ஆயிரம் கோடி, வேளாண் துறையில் ரூ.5 ஆயிரம் கோடி, சமூக நலத்துறையில் ரூ.4 ஆயிரம் கோடி, உயர்கல்வி துறையில் ரூ.1,500 கோடி, இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு

இதேபோல, ஆதி திராவிட நலத்துறையில் ரூ.1000 கோடி, சுற்றுச்சூழல், வனத்துறையில் ரூ.750 கோடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிறைத் துறையில் தலா ரூ. 500 கோடி, சுற்றுலாத்துறை, பால்வளத் துறையில் தலா ரூ.250 கோடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ.4 லட்சம் கோடியை திமுக அரசு கொள்ளை அடித்துள்ளது. இதனை விசாரிப்பதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இதற்கு உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியே நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!

இந்திய சாலைகளை எப்படி கடக்க வேண்டும் என கற்றுக்கொடுக்கும் ரஷ்ய பெண் - வைரலாகும் வீடியோ
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஃபாஸ்ட் ஃபுட்டால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்
இனி KYC கட்டாயமில்லை.. நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பால் வாகன ஓட்டிகள் நிம்மதி
இந்தியாவின் மிக மெதுவாகச் செல்லும் ரயில் பயணம்.. எங்கு உள்ளது தெரியுமா?