பெண்களுக்கு பைக்… மாணவர்களுக்கு லேப்டாப்… எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகள்

Edappadi K Palaniswami: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனமும், மாணவர்களுக்கு லேப்டாப்பும் வழங்கப்படும் என அறிவித்தார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்களுக்கு பைக்... மாணவர்களுக்கு லேப்டாப்... எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகள்

எடப்பாடி கே பழனிசாமி

Published: 

28 Dec 2025 19:19 PM

 IST

செங்கல்பட்டு, டிசம்பர் 28:  100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று அதிமுக (ADMK) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) வாக்குறுதி அளித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் டிசம்பர் 28, 2025 அன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர் பல அதிரடி தேர்தல் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

‘திமுகவை தீயசக்தி என முதலில் சொன்னவர் எம்ஜிஆர்’

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை தீய சக்தி என்று முதன்முதலில் கூறியவர் எம்ஜிஆர். அந்த தீய சக்தியை அகற்றுவதற்காகவே அவர் அதிமுகவை தொடங்கினார். அதனை அம்மா வளர்த்து பாதுகாத்தார். அதிமுக தொடங்கப்பட்ட நாளிலிருந்து, திமுக என்ற தீய சக்தியை தமிழ்நாட்டில் இருந்து முழுமையாக அகற்றுவது தான் எங்களின் நிலைப்பாடு என்று பேசினார்.

இதையும் படிக்க : விஜயகாந்த் நினைவு தினம்.. தலைவர்கள் மரியாதை.. பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணி!

திருப்போரூரில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

 

மேலும், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு சவால் விட்டார். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதை அவர் மறந்துவிட்டார். திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது. ஆனால் அதிமுக தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளது என்றார்.

பெண்களுக்கு மானிய விலையில் லேப்டாப்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்துப் பேசிய அவர், திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று கூறினர். ஆனால் அதை நடைமுறைப்படுத்தினார்களா? அனைத்தும் பொய்கள் தான். அதிமுகவின் தொடர் அழுத்தத்தால் தற்போது 100 நாள் வேலைத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிக்க : தவெக போட்டியிடும் சின்னம் எது தெரியுமா? வெளியானது முக்கிய அப்டேட்…கட்சியினர் குஷி!

மேலும், 100 நாள் திட்டத்தில் பணிபுரிபவர்களின் கூலி உயர்த்தப்படும் என்றும் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் கூலி உயர்த்தப்பட்டதா? திமுக அரசு 100 நாள் வேலைத் திட்டத்தையே முழுமையாக செயல்படுத்தாத அரசு. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், தற்போது உள்ள 125 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம். கூலியும் உயர்த்தப்படும்.

இடையூறு இல்லாமல் தொடர்ந்து வேலை வழங்கப்படும். இதுவே அதிமுகவின் இலக்கு என்றார். மேலும் பேசிய அவர், மேலும் அதிமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் பைக் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு