Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

90 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. போலி வாக்குகளை வைத்து… திமுக மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் 90 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது பதிவில், திமுகவின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

90 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. போலி வாக்குகளை வைத்து…  திமுக மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி கே பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Dec 2025 20:57 PM IST

சென்னை, டிசம்பர் 19: சிறப்பு வாக்காளர திருத்த பணியின் போது வழங்கப்பட்ட படிவத்தை நிரப்பி சமர்பித்தவர்களின் விவரம் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19, 2025 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு சென்றவர்கள், போன்றவர்கள் தற்போது விரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டவர்களின் விவரங்களை மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். நீக்கப்பட்டவர்கள் படிவம் 6 ஐ ஆன்லைன் மூலமாகவோ, அல்லது தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம் மூலம் பெற்று சமர்பிக்கலாம் என அறிவக்கப்பட்டுள்ளது. எஸ்ஐர் பணிகளுக்கு பிறகு 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு வரை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,41,14,587 என்ற அளவில் இருந்தது. இதனையடுத்து எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு, 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, தற்போது வாக்காளர் எண்ணிக்கை 5,43,76,755 என்ற அளவில் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.66 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.77 கோடியும் உள்ளனர். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7,191 பேர் உள்ளனர்.

இதையும் படிக்க : திருப்பரங்குன்றத்தில் தீ குளித்தவரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்…நயினார் நாகேந்திரன்!

திமுக மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இந்த நிலையில் இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது, அஇஅதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த SIR தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க : அதிமுக இடத்தை குறி வைக்கும் தவெக…விஜய்யின் திட்டம் பலிக்குமா?பொய்க்குமா?

”எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது. பொம்மை முதல்வரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்கு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது.

ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த உரிமையான நம் வாக்குகள் உண்மையானதாக இருப்பதை உறுதி செய்ய நடைபெறும் இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், தமிழ்நாட்டின் உண்மையான வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்ற, 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளமிடும் பட்டியலாக அமைத்திடும் வகையில் பணியாற்றிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.