Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுக இடத்தை குறி வைக்கும் தவெக…விஜய்யின் திட்டம் பலிக்குமா?பொய்க்குமா?

Tvk Plan To Take Over AIADMK Place: தமிழகத்தில் அதிமுகவின் இடத்தை பிடிப்பதற்கு தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு வகைகளில் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை தவெகவால் பிடிக்க முடியுமா, முடியாதா என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அதிமுக இடத்தை குறி வைக்கும் தவெக…விஜய்யின் திட்டம் பலிக்குமா?பொய்க்குமா?
அதிமுக இடத்தை குறி வைக்கும் தவெக
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 19 Dec 2025 18:20 PM IST

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளிடமும், கட்சி தலைவர்களிடமும் தேர்தல் ஃபீவர் தோற்றியுள்ளது. ஏனென்றால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இருக்கும் ஆட்சியை காப்பாற்ற வேண்டும். நாம் எப்போது ஆட்சிக்கு வருவோம் என்ற எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் ஒரு வித அச்சத்துடனேயே திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக அரசியல் களத்துக்கு புது வரவான தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சிக்கான அங்கீகாரத்தை உறுதி செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.  அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் பொதுக் கூட்டத்தில், திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று விஜய் திட்ட வட்டமாகவும், அதிரடியாகவும் தெரிவித்திருந்தார்.

திமுக-தவெக இடையே தான் போட்டி

இதே போல, மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்திலும் இதே கருத்தை முன் வைத்திருந்தார். இதுபோக, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிகழ்வுகளிலும் திமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்து வந்தார். இதே போல, ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் இதே கருத்தை முன் வைத்தார்.

மேலும் படிக்க: “அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு யாருக்கும் வாக்களிக்காது”.. விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி!

“திமுக ஒரு தீய சக்தி” என்ற சொல்

இதில், ஒரு படி மேலே சென்று மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கூறிய “திமுக ஒரு தீய சக்தி” என்ற வார்த்தையை தனதாக்கி கொண்டார். மேலும், மறைந்த தலைவர்களான பெரியார், எம்ஜிஆர் ஆகியோரை தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவராக ஏற்றதை, யாரும் கேள்வி கேட்க முடியாது. உரிமை கொண்டாட முடியாது என்று திட்டவட்டமாக கூறிய விஜய் அதிமுகவை மறைமுகமாகவும் சாடி இருந்தார்.

தமிழகத்தில் தவிர்க்க முடியாத இரு பெரும் சக்தி

விஜயின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பேசும் பொருளானதுடன், பெரும் பரபரப்பை கிளப்பியது. அதாவது, தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளே பழம்பெரும் கட்சிகளாகவும், மாறி மாறி ஆட்சி அமைக்கும் கட்சிகளாகவும், தவிர்க்க முடியாத சக்திகளாகவும் இருந்து வருகின்றன.

அதிமுகவின் இடத்தை குறி வைக்கும் தவெக

தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் திமுகவை எதிர்க்கும் பிரதான எதிர்க் கட்சியாக தன்னை நிலை நிறுத்துவதற்கும், அதே நேரத்தில் அதிமுகவின் இடத்தை தமிழக வெற்றிக் கழகம் குறி வைக்கும் வகையிலும் விஜயின் பேச்சு அமைந்துள்ளது. இதனால், எதிர் காலத்தில் திமுக- தவெக தான் “பிரதான கட்சிகள், பிரதான சக்திகள்” என்ற இடத்தை அடைய முடியும் என்பதன் அடிப்படையில் விஜய் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கான கால சூழ்நிலை பொருந்தி வருமா… அதற்கான வாய்ப்பை தமிழக மக்கள் அளிப்பார்களா என்பதை காலம் முடிவு செய்யும்.

மேலும் படிக்க: சேலத்தில் தவெக பொதுக்கூட்டம்? 5 இடங்கள் தேர்வு…அனுமதி கோரி காவல் ஆணையரிடம் மனு!