Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எங்களை யாரும் வீழ்த்த முடியாது.. மல்லை சத்யாவுக்கு துரை வைகோ பதிலடி!

MDMK Trichy Conference: திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், துரை வைகோ பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். அதேசமயம் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவுக்கும் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களை யாரும் வீழ்த்த முடியாது.. மல்லை சத்யாவுக்கு துரை வைகோ பதிலடி!
துரை - வைகோ
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 16 Sep 2025 08:06 AM IST

திருச்சி, செப்டம்பர் 16: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற திருச்சி மாநாட்டில், முன்னாள் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துரை வைகோ பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் வைகோவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நேற்று (செப்டம்பர் 15) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் வருகை தந்தனர். இந்நிகழ்வில் பேசிய துரை வைகோ, மத்திய பாஜக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

மதிமுக அரசியலுக்கு வந்த காரணம்

அவர் தனது உரையில், “கூட்டாட்சி, பெண் சமத்துவம், சமூக நீதி மற்றும் இரு மொழிக் கொள்கை ஆகியவற்றை நடைமுறைக்கு கொண்டு வரவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் அரசியலுக்கு வந்தது என தெரிவித்த துரை வைகோ,  பதவி , பொருள், பணம் ஆகியவற்றை ஈட்டுவதற்காக வந்த இயக்கம் மதிமுக கிடையாது என தெரிவித்தார்.  தொடர்ந்து மத்திய அரசின் கல்வி மற்றும் மும்மொழி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசிய அவர், ஆங்கிலம் தவிர்த்து இந்தி அல்லது சமஸ்கிருதம் போன்ற மொழிகளை உலக அளவில் தொடர்பு முறையாக பயன்படுத்த முடியாது இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் முயற்சியாகும் என தெரிவித்தார்.

Also Read:  மனதளவில் பாதிப்பு! என்னால் களங்கம் வேண்டாம்.. தழுதழுத்து பேசிய துரை வைகோ!

மல்லை சத்யாவுக்கு மறைமுக பதிலடி

மேலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை பாஜக அரசு மறுத்து வருவதாக குற்றம் சாட்டிய துரை வைகோ மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்தார். இறுதியாக தனது உரையின் போது,  “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?.. பைத்தியக்கார பயல்களா.. எங்களை யாரும் வீழ்த்த முடியாது. நானும் மதிமுகவும் வீழவே மாட்டோம். அண்ணா வழியில் தான் என்றும் பயணிப்போம்”  என தெரிவித்தார்.

துரை வைகோவின் இந்த பேச்சை தந்தை வைகோ கைத்தட்டி ரசித்துக் கொண்டிருந்தார். துரை வைகோவின் இந்த விமர்சனம் சமீபத்தில் மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா மீதுதான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read:  மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம் – வைகோ அறிவிப்பால் பரபரப்பு

மதிமுக வீழ்ச்சி அடையும் என மல்லை சத்யா வெளிப்படையாக தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாநாட்டு மேடையில் துரை வைகோ உரையாற்றியிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் கட்சியில் நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சியின்  கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் பெயர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.