முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஓரணியில் தமிழ்நாடு குறித்து ஆலோசனை..
DMK District Secretaries Meeting: திமுக தரப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜூலை 17 2025 ஆம் தேதியான இன்று சென்னை திமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cm Stalin
சென்னை, ஜூலை 17, 2025: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் புதிய திட்டங்கள் வகுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று அதாவது ஜூலை 17 2025 தேதியான இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே உடன்பிறப்பே வா என்ற தலைப்பின் கீழ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக சந்தித்து தொகுதியில் இருக்கக்கூடிய நிலவரங்களை கேட்டறிந்தார். திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 17, 2025) இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய திமுக தலைமையகத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை திட்டம்:
2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வதற்காக தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் களம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்து கொள்கிறார்.
Also Read: மாறுது வானிலை.. கனமழை பெய்ய வாய்ப்பு
அதேபோல் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார். அதாவது இந்த திட்டத்திற்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், தன்னார்வலர்கள், தொகுதி வாரியாக ,வார்டு வாரியாக வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து மொபைல் செயலி மூலம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் திமுகவில் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.
உங்களுடன் ஸ்டாலின்:
மற்றொரு பக்கம் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை ஜூலை 15 2025 தேதியான நேற்று சிதம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதாவது இந்த திட்டத்தின் கீழ் அரசுத்துறை சேவைகள் வீடுகளுக்கே தேடி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது தொகுதிகள் வாரியாக தமிழ்நாடு முழுவதிலும் பத்தாயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு பல்வேறு அரசு துறை சேவைகள் அங்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகையில் தகுதியான விடுபட்டவர்களை இதில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த முகாம்களில் அளிக்கக்கூடிய மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
காணொலிக் காட்சி வாயிலாக கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் .
– கழக பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு#DMK pic.twitter.com/U1FfSq4GB8
— DMK (@arivalayam) July 16, 2025
இப்படி திமுக தரப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜூலை 17 2025 ஆம் தேதியான இன்று சென்னை திமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது” என தெரிவித்துள்ளார்