SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக கூட்டணி கட்சிகள்!
DMK Alliance Protest Against SIR | தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் பணியை இந்திய தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்
சென்னை, நவம்பர் 11 : தமிழகத்தில் (Tamil Nadu) விரைவில் சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டுமன்றி, இன்னும் சில மாநிலங்களும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் தான் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை (SIR – Special Intensive Revision) இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) கையில் எடுத்துள்ளது. இந்த பணிக்கு பாஜக (BJP – Bharatiya Janata Party) உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், காங்கிரஸ் (Congress) உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக எஸ்ஐஆர் திருத்த பணிகளை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் (DMK – Dravida Munnetra Kazhagam) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (நவம்பர் 11, 2025) விசாரணைக்கு வர உள்ளது.
தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளன. அந்த வகையில், சென்னை தங்கசாலையில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக (MDMK – Marumalarchi Dravida Munnetra Kazhagam) பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (Marxist Communist) மாநில செயலாளர் சண்முகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க : 2000 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மேலும் பல இடங்களில் நடைபெறும் திமுக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம்
இதேபோல சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கூட்டணி ஆர்ரப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும் சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : 25 இடங்களில் அன்புச்சோலை மையங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. இதன் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் என்ன?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான தொண்டர்கள் கலந்துக்கொண்டு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளுகு எதிராக பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.