தொடங்கும் சபரிமலை சீசன்.. தமிழகம் வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..
Sabarimala Special Train: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மண்டல பூஜைகளை முன்னிட்டு, டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சீசன் களைகட்டும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்து தரிசனம் மேற்கொள்வார்கள். இதன் காரணமாக, தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை சீசன் நெருங்கும் நிலையில், ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தரவுள்ளனர். சபரிமலை சீசனை ஒட்டி அங்கு கடுமையான கூட்டநெரிசல் ஏற்படும். மக்கள் எந்தச் சிரமமும் இன்றி சபரிமலை சென்றடைந்திடத் தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் தமிழகம் வழியாக பயணிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, காக்கிநாடா டவுன் இருந்து கோட்டயம் வரை செல்லக்கூடிய சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நான்தேட் முதல் கொல்லம் வரை செல்லக்கூடிய சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மகரஜோதி மற்றும் மண்டல பூஜைகளை முன்னிட்டு, டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சீசன் களைகட்டும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்து தரிசனம் மேற்கொள்வார்கள். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்காக தேவஸ்தானம் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
காக்கிநாடா முதல் கோட்டயம் வரை சிறப்பு ரயில்:
இதன் காரணமாக, தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, காக்கிநாடா டவுன் முதல் கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காக்கிநாடா டவுன் இருந்து 2025 நவம்பர் 17, டிசம்பர் 1, டிசம்பர் 8, டிசம்பர் 15, டிசம்பர் 22, டிசம்பர் 29 ஆகிய தேதிகளிலும், 2026 ஜனவரி 5, ஜனவரி 12, ஜனவரி 19 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் காக்கிநாடாவில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 5.30 மணிக்கு சென்றடையும்.
அதேபோல், மறு மார்க்கத்தில் கோட்டாயம் இருந்து காக்கிநாடா டவுன் வரை வாராந்திர சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் இரவு 11 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சேவை 2025 நவம்பர் 18, டிசம்பர் 2, டிசம்பர் 9, டிசம்பர் 16, டிசம்பர் 23, டிசம்பர் 30 மற்றும் 2026 ஜனவரி 6, ஜனவரி 13, ஜனவரி 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். திருப்பூரைத் தொடர்ந்து போடனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் ஆகிய இடங்களில் நின்று, கடைசியாக கோட்டாயம் சென்றடையும். மறு மார்க்கத்திலும் இதே வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும்.
நான்தேட் முதல் கொல்லம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்:
இதேபோல், மகாராஷ்டிர மாநிலம் ஹசூர் சாஹிப் நான்தேட் முதல் கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் 2025 நவம்பர் 20 முதல் 2026 ஜனவரி 15 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படுகின்றன. நான்தேட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும். தமிழகத்தில் இந்த ரயில் காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், செங்கோட்டை, புனலூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் படிக்க: ஏஐ இடம் மருத்துவ ஆலோசனைகள் கேட்காதீர்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. காரணம் என்ன?
சார்லபள்ளி முதல் கொல்லம் வரை சிறப்பு ரயில்:
அதேபோல், சார்லபள்ளி முதல் கொல்லம் வரை இயக்கப்படும் வாராந்திர ரயில் 2025 நவம்பர் 18 முதல் 2026 ஜனவரி 13 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கூடலூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் மறு மார்க்கத்தில் கொல்லம் முதல் சார்ல்பாலி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும், 2025 நவம்பர் 20 முதல் 2026 ஜனவரி 15 வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.