Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2000 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

Deputy CM Udhayanidhi Stalin: 2025 மற்றும் 2026ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீக ஈடுபாடு உள்ள தம்பதிகளில் இருந்து, ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் 100 தம்பதிகள் சிறப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

2000 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Nov 2025 19:55 PM IST

சென்னை, நவம்பர் 10, 2025: இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 10, 2025 தேதியான இன்று திருவல்லிக்கேணியில் தொடங்கி வைத்தார். 2025 மற்றும் 2026ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீக ஈடுபாடு உள்ள தம்பதிகளில் இருந்து, ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் 100 தம்பதிகள் என, மொத்தம் 20 மண்டலங்களில் 2,000 தம்பதியினருக்கு திருக்கோயில்களில் சிறப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

2000 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் விழா:

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில், 70 வயது பூர்த்தி அடைந்த 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2,000 மூத்த தம்பதியினர் சிறப்பு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு செய்யப்படும் தம்பதியினருக்கு ரூ.2,500 மதிப்பிலான வேட்டி, சட்டை, புடவை, ரவிக்கை, பழவகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்படும்.

மேலும் படிக்க: 25 இடங்களில் அன்புச்சோலை மையங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. இதன் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் என்ன?

உங்கள் பேரனாக வந்ததில் மகிழ்ச்சி – துணை முதல்வர் ஸ்டாலின்:


இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சென்னை மண்டலங்களில் 200 மூத்த தம்பதிகளுக்கும், இதர மண்டலங்களில் 631 மூத்த தம்பதிகளுக்கும் என இன்று மட்டும் மொத்தம் 831 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. அதுமட்டுமல்ல, 200 மூத்த தம்பதிகளில் 18 ஜோடிகள் சேப்பாக்கம்–திருவல்லிக்கேணியை சேர்ந்தவர்கள்.

மேலும் படிக்க: தொடங்கும் சபரிமலை சீசன்.. தமிழகம் வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..

இங்கே நான் தமிழ்நாட்டின் துணை முதல்வராக வரவில்லை, உங்கள் குடும்பத்தின் பேரப்பிள்ளையாக வந்துள்ளேன். வந்திருக்கக்கூடிய மூத்த தாத்தா–பாட்டிகளுக்கு என்னுடைய அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து, இந்தச் சிறப்பான வாய்ப்பை அளித்த அமைச்சர் சேகர் பாபுவிற்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பார்த்தசாரதி சுவாமி கோயில் சார்பாக திருவல்லிக்கேணி நல்ல தம்பி தெருவில் ரூ.2.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துணை ஆணையர், செயல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்புகளையும், பார்த்தசாரதி தெருவில் ரூ.1.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பையும் திறந்து வைத்தார்.