தீபாவளிக்கு தனி வாகனத்தில் ஊருக்கு போறீங்களா? காவல்துறை முக்கிய அறிவிப்பு
Diwali 2025 : தீபாவளி நெருங்கும் நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது சவாலானதாக மாறிவருகிறது. இந்த நிலையில் கார்களில் பயணிப்பவர்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தாம்பரம் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளிக்கு (Diwali) இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் தமிழக அளவில் பரபரப்பு தொடங்கியிருக்கிறது. அதில் முக்கியமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது சவாலானதாக மாறியிருக்கிறது. ரயில்கள் (Train) மற்றும் அரசு பேருந்துகளில் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் சென்னையில் இருந்து மக்கள் தங்கள் வாகனங்களில் செல்வதால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்கிறீர்களா?
தீபாவளிக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு காரில் கிளம்பியுள்ளனர். இதனால் தாம்பரம் மார்க்கமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்க பகுதியைக் கடக்க பல மணி நேரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பயணிகளுக்கு சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன் படி தீபாவளியைக் கொண்டாட தனி வாகனங்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை, விரைவாக செல்ல ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் வழித்தடங்களை பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் டிராஃபிக்கில் சிக்காமல் மக்கள் விரைவாக தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியும் என்பதால் மக்கள் இந்த பாதையை அறிவித்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : மதுரைக்கு செல்ல ரூ.5,000 – 7,000ஆ? எச்சரிக்கையை மீறி கட்டணத்தை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் – மக்கள் அதிர்ச்சி
தனிநபர் கார் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் விமான கட்டணமும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல மாற்று வழிகளை தேட துவங்கியிருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து தங்கள் கார் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் தங்களுடன் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் பெட்ரோல் டீசல் செலவு குறையும், பயணிகள் தங்கள் சிரமம் இன்றி ஊர் செல்ல முடியும் என்பதால் இந்த வழியை தேர்ந்தெடுக்கின்றனர்.
இதையும் படிக்க : நெருங்கும் தீபாவளி…. வாடகைக்கு விடப்பட்ட கார்கள் பறிமுதல் – போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை
இந்த நிலையில் இப்படி சொந்த கார்களை தவறாக பயன்படுத்தினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அப்படி பயணிப்பவர்களின் விவரங்கள் கிடைக்காது என்பதால், விபத்து ஏற்பட்டால் மீட்பு பணிகள் சிரமம் எனவும், மோட்டார் வாகன சட்டத்தின் படி குற்றம் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.