எலி மருந்து… துரிதமாக செயல்பட்டு வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய டெலிவரி ஊழியர் – வைரலாகும் வீடியோ
Delivery Man Saves Customer’s Life: வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய டெலிவரி ஊழியர் ஒருவரின் செயல் சமூக வலைதலங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்களை பெரிதும் கவர்ந்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் 3 எலி மருந்துகளை ஆர்டர் செய்த நிலையில் சந்தேகமடைந்த டெலிவரி ஊழியர் அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.

வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய டெலிவரி ஊழியர்
சென்னை, ஜனவரி 8 : ஒரு டெலிவரின் ஊழியரின் செயலால் ஒரு மனித உயிரைக் காப்பாற்றிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. எலி மருந்து ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளரின் உயிரை, ஒரு டெலிவரி ஊழியர் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு காப்பாற்றிய செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சம்பவத்தின் போது, வாடிக்கையாளர் ஆர்டர் செய்திருந்த பொருளைப் பார்த்த டெலிவரி ஊழியருக்கு சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆர்டரில் 3 எலி மருந்து பேஸ்ட் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இது தற்கொலை போன்ற ஆபத்தான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம் என்ற எண்ணம் வந்ததால், அவர் வழக்கம்போல் பொருளை கொடுத்துவிட்டு செல்லாமல், உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளார்.
வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய டெலிவரி ஊழியர்
வாடிக்கையாளருடன் பேசிப் பார்த்த அவர், நிலைமை மோசமாக இருக்கலாம் என்பதை உணர்ந்து, அவருடன் பேசி அவரது தவறான முடிவை தவிர்க்க உதவியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, அந்த டெலிவரி ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தன் வேலைக்கான எல்லையைத் தாண்டி, மனிதாபிமானத்துடன் செயல்பட்டதற்காக பலரும் அவரை ஹீரோவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க : அமலாக்கத்துறை பற்ற வைத்த நெருப்பு…களமிறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை…விசாரணை வளையத்தில் அமைச்சர் கே.என்.நேரு?
இந்த நிகழ்வு, பொறுப்புணர்வுடன் செயல்பட்டு சுற்றியுள்ளவர்களின் கவனத்தால் எத்தனை பெரிய விபத்தையும் தடுக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு சிறிய சந்தேகம், சரியான நேரத்தில் எடுத்த முடிவு ஒரு மனித உயிரைக் காப்பாற்றிய சம்பவமாக இது மாறியுள்ளது.
டெலிவரி ஊழியரின் இன்ஸ்டாகிராம் பதிவு
இதையும் படிக்க : ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் விழுந்த மினிபஸ் – 20 பேர் பலத்த காயம்… 3 பேர் நிலைமை கவலைக்கிடம்
அந்த வீடியோவில் பேசிய டெலிவரி ஊழியர், ஒரு வாடிக்கையாளர் 2 எலி மருந்து ஆர்டர் செய்திருந்தார். என்ன காரணத்துக்காக அவர் ஆர்டர் செய்திருந்தார் என தெரியவில்லை. ஆனால் அந்த வாடிக்கையாளர் அழுதபடியே பேசியதால் ஏதோ பிரச்னை என புரிந்தது. வாடிக்கையாளர் முகவரிக்கு சென்றதும் அவரிடம், அவரது பொருள் வழியிலேயே தவறவிட்டதாக தெரிவித்தேன். அப்போதும் அவர் அழுதபடியே இருந்தார். அதன் பிறகு அவரிடம், எந்த பிரச்னையாக இருந்தாலும், தற்கொலை தீர்வல்ல என பேசினேன். எலி தொல்லையால் எலி மருந்து ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் பகலிலேயே ஆர்டர் போட்டிருக்கலாம். இப்படி நள்ளிரவில் ஆர்டர் செய்ய வேண்டிய அவசியமில்லை என பேசி அவரை சமாதானப்படுத்தினேன். ஒரு உயிரைக் காப்பாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி என தெரிவித்தார்.