Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தீ விபத்துக்குள்ளான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. சென்னை பெண்ணுக்கு ரூ.1.25 லட்சம் இழப்பீடு!

Electric Scooter Fire Accident Compensation | சென்னையை சேர்ந்த பெண் வாங்கிய மின்சார ஸ்கூட்டர் இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாகவே தீ விபத்துக்கு உள்ளான நிலையில், அந்த பெண்ணுக்கு ரூ.1.25 லட்சம் இழப்பீடு வழங்க வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தீ விபத்துக்குள்ளான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. சென்னை பெண்ணுக்கு ரூ.1.25 லட்சம் இழப்பீடு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jan 2026 23:47 PM IST

சென்னை, ஜனவரி 08 : சென்னையில் (Chennai) மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) வாங்கிய நபரின் வாகனம் தீ விபத்தில் சேதமடைந்த நிலையில், வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, தீ விபத்தில் சேதமான அந்த வாகனத்திற்கு ரூ.1.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டு ஆண்டுகளில் தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்

சென்னை, பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஷங்கரி என்ற பெண் 2022 ஆம் ஆண்டு ஒகினவா (OKinawa) மின்சார ஸ்கூட்டரை ரூ.1,08-க்கு வாங்கியுள்ளார். ஒகினவா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த ஸ்கூட்டரை அவர் சுமார் இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், 2024 ஜுலை மாதம் ஒரு நாள் சரியாக காலை 3.45 மணி அளவில் அவரது மின்சார ஸ்கூட்டரின் பேட்டரியில் தீப்பற்றி ஸ்கூட்டர் சேதமாகியுள்ளது. அதுமட்டுமன்றி, அந்த ஸ்கூட்டருக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அந்த பெண்ணின் தந்தையின் வண்டி மற்றும் மேலும் சில வீட்டு உபயோக பொருட்கள் இந்த விபத்தில் சேதமாகியுள்ளன.

இதையும் படிங்க : தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி…விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு?

சிக்கலை சரிசெய்து கொடுக்காத நிறுவனம்

தனது ஸ்கூட்டரின் பேட்டரிக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்பட்டு இருந்ததாகவும், முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட உடன், தானே சார்ஜ் செய்வதை நிறுத்தும் அம்சம் அதில் இருந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். தனது ஸ்கூட்டர் விபத்துள்ளானது குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் கூறிய அந்த பெண், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால், அது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பெண்களுக்கான உதவித் தொகை ரூ.2500-ஆக உயர்வு…அரசாணை வெளியீடு…முதல்வர் என்.ரங்கசாமி அறிவிப்பு!

இந்த நிலையில் தான் ஷங்கரி இந்த விவகாரம் தொடர்பாக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட  நிறுவனத்திடம் பெண்ணுக்கு உரிய இழப்பீடாக ரூ.1.25 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.