மது அருந்திய தகராறு.. கணவனை பானையால் அடித்து கொன்ற மனைவி

Cuddalore Crime News: கடலூர் மாவட்டத்தில் கணவன்-மனைவி தகராறு கொலையில் முடிந்தது. விருத்தாச்சலம், குருவன்குப்பத்தைச் சேர்ந்த வேல்முருகன் மது போதையில் மனைவி வள்ளியுடன் சண்டையிட்டார். ஆத்திரமடைந்த வள்ளி, எவர்சில்வர் குடத்தால் கணவரைத் தாக்க, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்திய தகராறு.. கணவனை பானையால் அடித்து கொன்ற மனைவி

வள்ளி - வேல்முருகன்

Updated On: 

04 Oct 2025 07:40 AM

 IST

கடலூர், அக்டோபர் 4: கடலூர் மாவட்டத்தில் எவர் சில்வர் குடத்தால் கணவனை மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை அடுத்து குருவன்குப்பம் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வரும் சண்முகம் என்பவரது மகன் வேல்முருகன் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவியும், அய்யனார், வெற்றிவேல் என இரண்டு மகன்களும் உள்ளனர். வேல்முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வரும் நிலையில் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மனைவி வள்ளி வேல்முருகனிடம் ரூ.1,000 கொடுத்துள்ளார். அதன்படி கடைக்கு சென்று பூஜை பொருட்களை வாங்கிய அவர் மீதமிருந்த பணத்திற்கு அங்கிருந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மது போதையில் வீட்டிற்கு சென்ற வேல்முருகன் பூஜை பொருட்களை தனது மனைவியிடம் கொடுத்த நிலையில் மீத பணத்தை தருமாறு அவர் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: வேறொரு நபருடன் பேசியதால் ஆத்திரம்.. காதலியை கல்லால் அடித்து கொலை செய்த காதலன்!

அதற்கு தான் அந்த பணத்தை செலவழித்து விட்டதாக வேல்முருகன் தெரிவிக்க, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் மீதம் இருக்கும் பணத்தில் தான் கணவர் மது குடித்த விவகாரம் வள்ளிக்கு தெரிந்தவுடன் தகராறு முற்றியுள்ளது. இதனால் வேல் முருகனுக்கு இரவு உணவு கொடுக்காமல் வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து கதவை உள்பக்கமாக கூட்டிக்கொண்டு வள்ளி தூங்கிவிட்டார்.

வேல்முருகன் மது போதையில் வீட்டில் முன் பகுதியில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் எழுந்த வள்ளி அருகில் இருந்த கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றுவிட்டார். இதனை கண்ட வேல்முருகன் உடனே வீட்டுக்குள் சென்று படுத்துக் கொண்டார். வீட்டிற்குள் வந்தது தொடர்பாக கணவன் மனைவி  இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை.. விசாரணையில் ட்விஸ்ட்!

இதனால் ஆத்திரமடைந்த வள்ளி அங்கிருந்து எவர்சில்வர் குடத்தை எடுத்து வேல்முருகன் தலையில் ஓங்கி அடித்த நிலையில் அவர் சுருண்டு விழுந்தார். அதனை தொடர்ந்து பயந்துபோன வள்ளி உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் பற்றிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்,  துணை போலி சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் அப்பகுதி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து வேல்முருகனின் குடும்பத்தினர் அளித்த புகாரியின் அடிப்படையில் ஆலடி போலீசார் வழக்கு பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர்.