AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 7 பேர்.. ஒரே ஆண்டில் 2,821 குடும்ப தலைவிகள் தற்கொலை.. NCRB அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!

Tamil Nadu Female Households Suicide: தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2024 ஆம் ஆண்டில் 2,821 குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 7 பேர்.. ஒரே ஆண்டில் 2,821 குடும்ப தலைவிகள் தற்கொலை.. NCRB அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!
கோப்புபடம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 09 Jun 2026 21:43 PM IST

இந்தியாவில் விபத்து மற்றும் தற்கொலையால் ஏற்படும் மரணங்கள் என்ற பெயரில் 2024- ஆம் ஆண்டுக்கான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 7 குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கடந்த 2024- ஆம் ஆண்டில் மட்டும் 2,821 குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 ஆயிரமாக இருந்தது. இதில், குடும்பம் சார்ந்த அழுத்தங்கள் மற்றும் கடுமையான மன உளைச்சல் ஆகியவை காரணம் என மனநல ஆலோ தெரிவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 48.9 சதவீதம் பேர் குடும்பத் தலைவராக இருப்பதாகவும், மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 13 சதவீதமாக இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 38.8 சதவீம் குடும்ப பிரச்னை தற்கொலைகள்

நாடு முழுவதும் குடும்ப பிரச்சினைகளால் ஏற்படும் தற்கொலைகள் 33.5 சதவீதம் என்றும், அதில், தமிழகத்தில் அதிகபட்சமாக 38.8 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, உடல் நலக் கோளாறு காரணமாக 18 சதவீதம் பேர் தற்கொலை செய்வதாகவும், அதிலும் தமிழகத்தில் 29.3 சதவீதம் பேர் இருப்பதாகவும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சினேகா என்ற தற்கொலை தடுப்பு அமைப்பை நடத்தும் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் கோவையில், குடும்பத் தலைவிகள் செய்யும் வேலைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை.

மேலும் படிக்க: சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையில் 2500 புதிய பணியிடங்கள்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!

தற்கொலை செய்பவர்கள் பெரும்பாலோனோர் படித்தவர்கள்

தற்கொலை செய்யும் பெரும்பாலான பெண்கள் படித்தவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும் பொருளாதார ரீதியாக மற்றவரை சார்ந்திருப்பவர்களாகவும், உணர்வு ரீதியாக ஆதரவற்றவராகவும் இருந்து வருகின்றனர். ஒரு இல்லத்தரசியின் பணி வேலைக்கு செல்லும் பெண்களை விட அதிகமானதாக இருந்தாலும் அதற்குரிய அங்கீகாரம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. சாதாரண இல்லத்தரசிகளாகவே குடும்பம் மற்றும் சமூகத்தால் பார்க்கப்படுகின்றனர்.

பல்வேறு கருத்து வேறுபாடுகளால் தற்கொலை

நிறைவேறாத லட்சியங்களின் சுமை, தனிமை மற்றும் அதனை வெளிப்படுத்த முடியாத குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்க வேண்டியது அழுத்தம் என அனைத்தும் அவர்களின் மனநிலை மோசமாக பாதிப்பதாக மருத்துவர் கூறினார். பல்வேறு பெண்கள் தங்களின் சுயமரியாதை மற்றும் அடையாளத்தின் மீது படிப்படியான சர்வீஸ் சந்தித்து வருகின்றனர். இதனுடன் உடல் கோளாறு, நிதி நெருக்கடி, திருமண வாழ்வில் உண்டாகும் கருத்து வேறுபாடுகள் போன்றவை அவர்களை தீவிரமாக நடவடிக்கைகள் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

தற்கொலை எண்ணத்தை தவிர்க்க

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050).

மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு!

Follow Us