Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவில் நிதியில் வணிக வளாககங்கள் கட்டக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Temple Property Dispute: கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டுவது மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஏ.பி.பழனி என்பவர் தொடர்ந்த வழக்கு அக்டோபர் 23, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவில் நிதியில் வணிக வளாககங்கள் கட்டக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Oct 2025 18:15 PM IST

சென்னை, அக்டோபர் 23: கோவில் நிதியைப் பயன்படுத்தி வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டக் கூடாது என தமிழகமெங்கும் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு சென்னை உயர்நீதிமன்றம்  (Madras High Court) உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் (Puducherry) உள்ள வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏ.பி. பழனி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சென்னை கந்தக்கோட்டம் முத்துக்குமாரசுவாமி கோவில் நிலத்தில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இது கோவிலுக்கு நிதி வழங்கும் பக்தர்களின் நோக்கத்திற்கு விரோதமானது. கோவில் சொத்துகளை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு அக்டோபர் 23, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏ.பி.பழனி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கோவில் நிதி பக்தர்கள் வழங்கிய நன்கொடையால் உருவானது. அதனை வணிக நோக்கில் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கோவில் நிதியில் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்ட தடைவிதித்து அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறும் இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க : புதிய உச்சம்! தீபாவளியை முன்னிட்டு ரூ.789 கோடி மது விற்பனை – எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?

பக்தர்களின் வசதிக்காக கட்டடங்கள் கட்டலாம்

மேலும், கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் நிலத்தில் தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருந்தால், அவை தொடரலாம் எனவும், கோவில் நிதி பக்தர்களின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கில், தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை நவம்பர் 22, 2025 அன்றுக்குள் தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

‘கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதில் என்ன தவறு?’

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்காக, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் படிக்க : மழை காலத்தில் தொடரும் மின் விபத்துகள் – தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மின்சார வாரியம் அறிவிப்பு

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 29, 2025 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரி உருவாக்குவதை ஏன் தடுக்கிறீர்கள்? கல்விக்காக கோவில் நிதியை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. கல்விக்காக கோவில்நிதியை பயன்படுத்துவதோ, கல்லூரி கட்டுவதிலோ என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.