Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பள்ளி-கல்லூரிகளுக்கு ஜன.28- ஆம் தேதி விடுமுறை…வெளியான அறிவிப்பு…மாணவர்கள் குஷி!

Tiruvarur District Local Holiday: திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஜனவரி 28- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு பதில் பிப்ரவரி 7- ஆம் தேதி வேலை நாளாகும்.

பள்ளி-கல்லூரிகளுக்கு ஜன.28- ஆம் தேதி விடுமுறை…வெளியான அறிவிப்பு…மாணவர்கள் குஷி!
திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 26 Jan 2026 13:11 PM IST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக முடிவு செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக திருப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, கோவிலில் நடைபெற்று வந்த திருப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வருகிற ஜனவரி 28- ஆம் தேதி ( புதன்கிழமை) பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும், இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கும் திருவாரூர் மாவட்ட மக்களின் வசதிக்காக ஜனவரி 28- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 28- இல் ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக் கோவிலில் வருகிற புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதில், திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு ( தேர்வுக்கு இடையூறு இல்லாமல்) வருகிற 28- ஆம் தேதி ( புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: சென்னையில் 27 ஆம் தேதி இந்த 5 புறநகர் ரயில்கள் ரத்து – எந்தெந்த ரயில்கள்?

அரசு அலுவலகம்-கருவூலங்களில் குறைந்த ஊழியர்கள்

மேலும், திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், அனைத்து துணை கருவூலங்கள் மற்றும் மாவட்ட கருவூலம் ஆகியவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு வழக்கம் போல செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் பிப்ரவரி 7- ஆம் தேதி ( சனிக்கிழமை) வேலை நாளாக கணக்கில் கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு

Thiruvarur Local Holiday Annoncement

திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

ராஜகோபால சுவாமி கோயிலின் சிறப்பு

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜகோபாலசாமி கோயிலில் உள்ள சுவாமி 12 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் 16 கோபுரங்களுடன் ( கோபுரம் நுழைவு வாயில் ), 7 தூண்கள் ( பிராகாரத்தில் ), 24 சந்நிதிகள், 7 மண்டபங்கள் மற்றும் 9 புனித தீர்த்தங்கள் ( குளங்கள் ) உள்ளன. இந்த கோயிலில் வெண்கலத்தில் செய்யப்பட்ட உற்சவர் சிலை சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். இங்கு உள்ள குளம் ஹரித்திராந்தி என்று (1,158 அடி நீளம், 837 அடி அகலம்) அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க: சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..