பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை மானியம் – தமிழ்நாடு அரசு புதிய தொழில்முனைவோர் திட்டம்
Women Entrepreneur Scheme : பெண்கள் புதிய தொழில் தொடங்கவும் அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்தவும் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் பெறலாம். அந்த கடனுக்கு மாநில அரசு சார்பில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, மார்ச் 6 : தமிழ்நாட்டில் பெண்களின் தொழில் கனவை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பெண்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தகுதியான பெண்களுக்கு அவர்கள் புதிய தொழில் தொடங்கவும் அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்தவும் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் பெறலாம். மேலும் அந்த கடனுக்கு மாநில அரசு சார்பில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதாவது ரூ.2 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழச்சியில் துவங்கி வைத்தார். இந்த திட்டம் சிறு, குறு தொழில்துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
தொழில் துவங்க முயற்சிக்கும் பெண்களுக்கு தமிழக அரசின் புதிய திட்டம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த பல முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் சுய உதவி குழுக்கள், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கான விடுதி போன்ற திட்டங்கள் நாடு முழுவதும் பாராட்டுக்களை பெற்று வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
மேலும் இதன் ஒரு பகுதியாக அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் இலக்குடன் இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கி கடன் வழங்கப்படுவதுடன், தொழில் துவங்க தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆலோசனை மற்றும் விற்பனை தொடர்பான வழிகாட்டுதலும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் பெண்கள் உற்பத்தி, சேவை அல்லது வணிக நிறுவனங்களை தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும் இதில் 25 சதவிகிதம் வரை அரசு மானியம் வழங்கும். அது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை இருக்கும். மேலும் இந்த திட்டத்தின் மொத்த மதிப்பில் 5 சதவிகிதம் வரை பயனர்கள் பங்களிப்பாக செலுத்தினால் போதும். மேலும் இந்த திட்டத்தின் சிறப்பமச்மாக கடனுக்கு அடமானம் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் வசிக்கும் 18 முதல் 55 வயதுவரை உள்ள பெண்கள் மற்றும் திருங்கைகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி அல்லது வருமான வரம்பு போன்ற எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மேலும் இந்த திட்டத்தில் இதுவரை ரூ.261.93 கோடி மதிப்பிலான 2,261 விண்ணப்பங்களுக்கு வங்கி கடன் வழங்க அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், மாநிலத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் இந்த திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



