Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – 4 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ் – என்ன நடந்தது?

Child Kidnapping at Railway Station: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவரின் 3 வயது குழந்தை கடத்தப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்த போலீசார் 4 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றன.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – 4 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ் – என்ன நடந்தது?
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Dec 2025 14:54 PM IST

நாகர்கோவில், டிசம்பர் 7 : நாகர்கோவில் ரயில் (Train) நிலையத்தில் 3 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் தனிப்படை அமைத்து குழந்தையை கைப்பற்றியதோடு, குற்றவாளிகளையும் கைது செய்தனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டு குவித்து வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் என்பவரின் குழந்தை என்பதும் அவர்கள் பலூன் விற்க கோட்டார் தேவாலய விழாவில் பலூன் விற்ற பிறகு ஊர் திரும்பியதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குழந்தையை காவல்துறையினர் உடனடியாக மீட்ட நிலையில், அவர்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியரின் குழந்தை கடத்தல்

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்தவர் ரஞ்சன். பலூன் வியாபாரியான இவர், தனது மனைவி முஸ்தா மற்றும் தனது 3 வயது மகளுடன் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு பகுதியில் தேவாலய திருவிழாவில் பலூன் விற்க வந்துள்ளார். இந்த நிலையில் டிசம்பர் 6, 2025 அன்று சனிக்கிழமை மாலை மீண்டும் தன் சொந்த ஊருக்கு செல்ல, நாகர்கோவில் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது, ஆட்டோவில் வந்த ஒருவர் குழந்தைக்கு சாப்பாடு வாங்கித் தருவதாக சொல்லி அவர்களிடம் இருந்து குழந்தையை தூக்கி சென்றுள்ளார்.

இதையும் படிக்க : தந்தையின் உயிரை பறித்த யானை தெய்வானை.. பாகனின் மகள்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

இதனையடுத்து செய்வதறியாது திகைத்த ரஞ்சன், பொதுமக்கள் உதவியுடன் கோட்டாறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்த தகவலறிந்த எஸ்பி, தனிப்படை அமைத்து குழந்தையை மீட்க உத்தரவிட்டார். இந்த நிலையில் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், அதன் அடிப்படையில் விசாரணையை துவங்கினர். இந்த நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மர்ம நபர் குழந்தையை தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

4 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்

குழந்தையை ஆட்டோவில் தூக்கி சென்ற நிலையில், அப்பகுதியைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் குழந்தை நாகர்கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டது. பின்னர் குழந்தையை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் நேரில் பார்த்த பெற்றோர்கள், போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : டியூஷனுக்கு சென்ற 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்.. அதிர்ச்சி சம்பவம்!

இந்த சம்பவம் தொடர்பாக, நாகர்கோவிலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் யோகேஷ் குமார் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து ஆட்டோவையும் கைது செய்தனர். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.