Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாதி வழியில் நின்ற மெட்ரோ ரயில்.. 500 மீட்டர் வரை ரயில் பாதையில் நடந்து சென்ற பயணிகள்..

Metro Train Chennai: இன்று அதிகாலை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயிலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பாதி வழியில், சுரங்கப் பாதை நடுவில் ரயில் நின்றது. இந்த சம்பவம் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் இடையே நடைபெற்றது.

பாதி வழியில் நின்ற மெட்ரோ ரயில்.. 500 மீட்டர் வரை ரயில் பாதையில் நடந்து சென்ற பயணிகள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Dec 2025 10:45 AM IST

சென்னை, டிசம்பர் 2, 2025: சென்னை மெட்ரோ ரயிலின் நீல வழிப் பாதையில் இன்று காலை பயணிகள் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் பாதியிலேயே சுரங்கப் பாதையில் நின்றது. இதனைத் தொடர்ந்து ரயிலில் இருந்த பயணிகள் வேறு வழியில்லாமல் கீழே இறங்கி நடந்து சென்று அருகில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தை சென்றடைந்தனர். சுமார் 500 மீட்டர் தூரம் வரை அவர்கள் ரயில் பாதையில் நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை நேரத்தில் பணிக்கு செல்லும் மக்கள் மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக கடும் அவதிக்கு உள்ளானார்கள். சென்னை நகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அலுவலகத்துக்கு செல்லும் மக்கள் வரை லட்சக்கணக்கானோர் மெட்ரோ ரயிலை நம்பி பயணம் செய்கிறார்கள்.

மேலும் படிக்க: 234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நாம் தமிழர் கட்சி.. திருச்சியில் அடுத்த ஆண்டு மக்களின் மாநாடு..

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்:

சென்னையைப் பொறுத்தவரையில் விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் வரையும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் செங்கல்பட்டு வரை இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கும் பணிகளும், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் மாதத்திற்கு குறைந்தது 80 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். மக்கள் அதிகளவில் மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பிலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: குடையுடன் போங்க மக்களே..! சென்னை திருவள்ளூரில் கனமழை தொடரும் – வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்..

சுரங்கப்பாதையில் நின்ற மெட்ரோ ரயில்:


இந்த சூழலில், இன்று அதிகாலை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயிலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பாதி வழியில், சுரங்கப் பாதை நடுவில் ரயில் நின்றது. இந்த சம்பவம் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் இடையே நடைபெற்றது.

500 மீட்டர் வரை ரயில் பாதையில் நடந்து சென்ற பயணிகள்:


இதன் காரணமாக பயணிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கி, சுரங்கப் பாதை வழியாக 500 மீட்டர் தொலைவு நடந்து அருகிலிருந்த மெட்ரோ ரயில் நிலையத்தை சென்றடைந்தனர். பின்னர், அந்த பழுதடைந்த மெட்ரோ ரயில் பாதையிலிருந்து அகற்றப்பட்ட பின், காலை 6.20 மணியிலிருந்து வழக்கம்போல் மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.