ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு…முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

Pongal Gift Package : சென்னை, ஆலந்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மாவட்டங்களில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்க உள்ளனர் .

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு...முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

Updated On: 

08 Jan 2026 11:54 AM

 IST

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், முழு கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் மற்றும் ரூ.3000 பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடியே 22 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

இந்த நிலையில், உங்கள் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சென்னை ஆலந்தூரில் இன்று வியாழக்கிழமை ( ஜனவரி 8) தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்வர் மு. க. ஸ்டாலின் நிகழ்வில் பங்கேற்று பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 3000 ரொக்க பரிசு ஆகியவற்றை ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மாவட்டங்களில் திமுக அமைச்சர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணத்தை வழங்கி தொடங்கி வைக்க உள்ளனர்.

மேலும் படிக்க: பொங்கலை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு? எப்போது?

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக…

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆகியவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் தங்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் கிடைக்காத நபர்கள்

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று அங்கு வழங்கப்படும் டோக்கனை பெற்று அதில் விவரங்களை பூர்த்தி செய்து தங்களுக்கான பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில்…

சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வில், திமுக எம். பி. டி ஆர் பாலு, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருள்களும் இங்கு வாங்கலாம்…கோயம்பேட்டில் சிறப்பு சந்தை!

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..