AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Jul 2026 06:26 AM IST

ஜூலை 2, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்பநிலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, திருத்தணியில் 36 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 37.7 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 37.6 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 37.7 டிகிரி செல்சியஸ் மற்றும் நாகையில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

படிப்படியாக குறையும் வெப்பநிலை:

சென்னையைப் பொறுத்தவரை, நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாட்களிலும் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே நீடிக்கும் என்றும், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: 125 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்.. விதிகளில் மாற்றம் கோரி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

கனமழை எச்சரிக்கை எங்கே:

ஜூலை 2-ஆம் தேதியான இன்று, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 3-ஆம் தேதி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: அணுக்கனிம சுரங்க விவகாரம்.. தவெக அரசின் இரட்டை வேடத்தை தோலுரித்த எடப்பாடி பழனிசாமி!

ஜூலை 4-ஆம் தேதி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 7-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us