Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்டா மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை இரவு நேரங்களில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Nov 2025 13:12 PM IST

வானிலை நிலவரம், நவம்பர் 9, 2025: வடத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 9, 2025 தேதியான இன்று நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், குமரி மாவட்டத்திலும் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2025 நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 12, 2025 அன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் கனமழை:

நவம்பர் 13, 2025 அன்று கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 15, 2025 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீப்பிடித்த கார்… உடல் கருகி உயிரிழந்த புது மாப்பிள்ளை – திருவாரூர் அருகே பரபரப்பு

சென்னையில் மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை இரவு நேரங்களில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தாக்கம் குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னையில் 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்.. தமிழக அரசு உத்தரவு

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், சிவகிரி (தென்காசி), சிட்டம்பட்டி (மதுரை), திருப்புவனம் (சிவகங்கை) தலா 4, மதுரை விமானநிலையம் (மதுரை), திருமங்கலம் (மதுரை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) தலா 3, திற்பரப்பு (கன்னியாகுமரி), மதுரை நகரம் (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), மேலூர் (மதுரை), தல்லாகுளம் (மதுரை) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.