AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை விமான நிலையத்தில் 900 கிராம் தங்கம், அரியவகை விலங்குகள் பறிமுதல்.. தீவிர விசாரணையில் சுங்க அதிகாரிகள்

Chennai Airport: ஜூன் 20, 2025 தேதியான இன்று சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற அரியவகை விலகுகள் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்ர்றனர்.

சென்னை விமான நிலையத்தில் 900 கிராம் தங்கம், அரியவகை விலங்குகள் பறிமுதல்.. தீவிர விசாரணையில் சுங்க அதிகாரிகள்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Jun 2025 13:08 PM IST

மலேசியா நாட்டிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.85 லட்சம் மதிப்புடைய, 900 கிராம் தங்க போல்ட், நட்டுகள் சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்க போல்ட்கள் வெளியே தெரியாமல் இருக்க, கிரே கலர் பெயிண்ட் அடித்து, நூதன முறையில், தங்கம் கடத்தி வந்த, சென்னையைச் சேர்ந்த பயனியை, சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து ஒரு நாளைக்கு ஏராளமான விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து தரையிறக்கப்படுகிறது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அரிய வகை உயிரினங்கள் தங்கம் கடத்துவது கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய தங்கம்:

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய உடைமைகளை சோதித்தனர்.

அப்போது உடைமைகளில்,99 தங்கத்தில் ஆன போல்ட், நட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது தங்க போல்ட், நட்டு என்று வெளியில் தெரியாமல் இருப்பதற்காக, கிரே கலர் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அந்த 99 தங்க போல்ட், நட்டுகளின் மொத்த எடை சுமார் 900 கிராம் ஆகும். அதன் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அந்த தங்க போல்ட் நட்டுகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

சிக்கிய அரியவகை விலங்குகள்:

ஜூன் 19 2025 அன்று சென்னை விமான நிலையத்தில் சுமார் 85 லட்சம் மதிப்புடைய 900 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 20, 2025 தேதியான இன்று சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணிகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது அரிய வகை ஆப்பிரிக்கா கருங்குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்தது.

தாய் ஏர்வேஸில் இருந்து சென்னைக்கு வருகை தந்த 40 வயது உடைய நபரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அரிய வகை ஆப்பிரிக்கா நாட்டின் இரண்டு கருங்குரங்குகளும் ஆப்பிரிக்கா நாட்டின் அரிய வகை ஏழு ஆமைகளும் இருந்துள்ளது. இதனை அடுத்து அந்த விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த நபரையும் கைது செய்தனர்.

Follow Us