AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பயணிகளே..! சென்னை-கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில்கள் ரத்து..!

Chennai Suburban Trains Cancelled: சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையேயான பராமரிப்புப் பணிகளால் 2025 ஜூன் 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 11.20 முதல் மாலை 3.20 மணி வரை பணிகள் நடைபெறும்.

பயணிகளே..! சென்னை-கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில்கள் ரத்து..!
சென்னை-கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில்கள் ரத்துImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 08 Jun 2025 10:24 AM IST

சென்னை ஜூன் 08: சென்னை சென்டிரல்-கும்மிடிப்பூண்டி (Chennai Central-Gummidipoondi) இடையே பராமரிப்பு பணியால் 2025 ஜூன் 10 மற்றும் 12 தேதிகளில் 17 மின்சார ரெயில்கள் ரத்து (17 electric trains cancelled) செய்யப்படுகின்றன. காலை 11.20 முதல் மாலை 3.20 மணி வரை இந்த பணிகள் நடைபெறும். சென்டிரல், சூலூர்பேட்டை, கடற்கரை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் புறப்படும் மற்றும் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் பகுதி நேர ரத்து அடைவதுடன், கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். இதற்குப் பதிலாக, குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பயணிகள் முன்னதாக திட்டமிடுவதை தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை-கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில்கள் ரத்து

சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த பணி திங்கட்கிழமை மற்றும் ஜூன் 12ஆம் தேதி காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை (மொத்தம் 4 மணி நேரம்) நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 17 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் https://sr.indianrailways.gov.in/ரயில் ரத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்

சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் காலை 10.30, 11.35 ரெயில்கள்

சென்டிரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் காலை 10.15, மதியம் 12.10, 1.05 ரெயில்கள்

கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் காலை 9.40, 12.40 ரெயில்கள்

சென்டிரலில் இருந்து ஆவடி செல்லும் இரவு 11.40 ரெயில்

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்டிரலுக்குச் செல்லும் மதியம் 1.00, 2.30, மாலை 3.15 ரெயில்கள்

சூலூர்பேட்டையில் இருந்து சென்டிரலுக்குப் புறப்படும் மதியம் 1.15, மாலை 3.10, இரவு 9.00 ரெயில்கள்

சூலூர்பேட்டையில் இருந்து நெல்லூர் செல்லும் மாலை 3.50 ரெயிலும், நெல்லூரில் இருந்து பின்பு வரும் மாலை 6.45 ரெயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி நேர ரத்து

செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி ரெயில், கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே மட்டும் ரத்து செய்யப்படும்.

கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் ரெயில், கும்மிடிப்பூண்டி – கடற்கரை இடையே மட்டுமே ரத்து செய்யப்படும்.

சிறப்பு ரெயில்கள் இயக்கம்

இந்த இரு தேதிகளிலும் சில முக்கிய நேரங்களில் சென்டிரல்-பொன்னேரி, சென்டிரல்-மீஞ்சூர், கடற்கரை-பொன்னேரி, பொன்னேரி-சென்டிரல், மீஞ்சூர்-சென்டிரல், பொன்னேரி-சென்டிரல் போன்ற வழித்தடங்களில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே (Southern Railway)

தெற்கு ரெயில்வே இந்திய ரெயில்வேயின் முதன்மை மண்டலங்களில் ஒன்றாகும். இது 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது மற்றும் இந்தியாவின் மிகப்பழமையான ரெயில்வே மண்டலமாகும். சென்னை நகரம் தெற்கு ரெயில்வேயின் தலைமையகமாக செயல்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் இம்மண்டலம் சேவையை வழங்குகிறது. பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் தெற்கு ரெயில்வே, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயணிகள் வசதிகளை அதிகரிப்பதில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது.

Follow Us