டிசம்பருக்குள் ஹேப்பி நியூஸ்! சூப்பரா மாறப்போகும் சென்னை விமான நிலையம்.. கூட்டத்தை சமாளிக்க செம திட்டம்..

Chennai Airport: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2- ஆம் கட்ட ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் டிசம்பர் மாதம் திறக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பருக்குள் ஹேப்பி நியூஸ்! சூப்பரா மாறப்போகும் சென்னை விமான நிலையம்.. கூட்டத்தை சமாளிக்க செம திட்டம்..

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த விமான முனையம்

Updated On: 

27 Mar 2026 08:31 AM

 IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் தினந்தோறும் 450- க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. அதன்படி, இந்த விமானங்களில் தினம் தோறும் சுமார் 55 ஆயிரம் பயணிகள் சென்று வருகின்றனர். மேலும், எதிர்வரும் காலத்தில் அதிக அளவு பயணிகள் விமான நிலையத்துக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், பயணிகளை கையாளும் திறனை அதிகரிப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் 3- ஆவது முனைய பகுதியில் ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த பணிகளின் முதல் கட்ட பணிகள் கடந்த 2023- ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதனை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார்.

ஒருங்கிணைந்த விமான முனையத்தின் 2- ஆம் கட்ட பணிகள்

இதைத் தொடர்ந்து, 2- ஆம் கட்ட விரிவாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று தெரிகிறது. இந்த இரண்டாம் கட்ட பணிகளை வருகின்ற ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போரின் காரணமாக ஸ்டீல் உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒருங்கிணைந்த விமான நிலையத்தை கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி… ஓசூரில் ஓட்டலின் அதிரடி சலுகை!

டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டம்

எனவே, சர்வதேச விமான முனையத்தின் 2-ஆம் கட்ட பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடித்து விமான நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பயணிகளை கையாளும் திறன் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் சென்னை விமான நிலைய சர்வதேச முனையங்களில் “கோட் இ” அக விமானங்கள் வரை கையாளும் வசதி உள்ளது. ஒருங்கிணைந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், பெரிய அளவிலான இறக்கை கொண்ட “கோட் எஃப்” ரக விமானங்கள் இயக்கப்பட முடியும்.

அதிக அளவிலான விமான நிறுவனங்கள் முன்வரும்

இதன் காரணமாக, ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களை போல சென்னை விமான நிலையத்திலும் அதிக அளவிலான விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களை இயக்கம் முன் வருவார்கள். தற்போது, சர்வதேச முனையத்தில் 120 செக்கிங் இன் கவுண்டர்கள் உள்ளன. விமான முனையத்தின் 2- ஆம் கட்ட பணிகள் முடிந்து திறக்கப்படும் போது, மேலும், 72 செக் இன் கவுண்டர்கள் திறக்கப்படும். இதனால் பயணிகள் விரைவாக பாதிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனைத்து சோதனைகளையும் முடித்து குறித்த நேரத்துக்கு விமான பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Poonamalle Constituency Election 2026: வேகமான நகர்புற வளர்ச்சியை காணும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..