AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 ஆண்டுகள் தொந்தரவு? – அண்ணா பல்கலை பேராசிரியர் மீது மாணவி புகார்

Anna University Professor: அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார். 3 ஆண்டுகளாக தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் விசாரணை தீவிரமாக நடத்தி வருகின்றனர். முந்தைய பாலியல் வழக்கு பின்னணியில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இத்தகைய புகார் எழுந்திருப்பது சமூகத்தில் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

3 ஆண்டுகள் தொந்தரவு? – அண்ணா பல்கலை பேராசிரியர் மீது மாணவி புகார்
அண்ணா பல்கலைக்கழகம்Image Source: X
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 27 Mar 2026 09:32 AM IST

அண்ணா பல்கலைக்கழக மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போன் மூலம் ஆபாசமாக பேசியதாக மாணவி கூறியுள்ளார். அபிராமபுரம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற மாணவிகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. முந்தைய பாலியல் வழக்கு பின்னணியில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இதற்கு முன்பு 2024 டிசம்பர் மாதத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கு தமிழகத்தை அதிர்ச்சியடைய செய்தது. அந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் மறையாத நிலையில், தற்போது மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் இத்தகைய புகார் எழுந்திருப்பது சமூகத்தில் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய சர்ச்சை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பேராசிரியர் மீது பாலியல் தொல்லை குறித்த புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட இந்த புகார், கல்வி வளாகங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வருவது கவலைக்கிடமானதாக பார்க்கப்படுகிறது.

மாணவியின் குற்றச்சாட்டு விவரங்கள்

அந்த மாணவி அளித்த புகாரில், பேராசிரியர் ஞானவேல் பாபு கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறியுள்ளார். நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆபாசமாக பேசி வந்ததாகவும், இரவு நேரங்களில் அழைத்து தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நண்பர்களுடன் செல்வதையும் தவறாக விமர்சித்ததாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையீடு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று பல மாணவிகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. எங்கெல்லாம் தெரியுமா..? வானிலை நிலவரம் இதோ..

போலீஸ் விசாரணை தீவிரம்

இந்த புகாரை தொடர்ந்து, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், பேராசிரியர் அனுப்பியதாக கூறப்படும் மெசேஜ்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு குழுவிலும் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய சம்பவம் மற்றும் தற்போதைய தாக்கம்

இதற்கு முன்பு 2024 டிசம்பர் மாதத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கு தமிழகத்தை அதிர்ச்சியடைய செய்தது. அந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் மறையாத நிலையில், தற்போது மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் இத்தகைய புகார் எழுந்திருப்பது சமூகத்தில் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us