Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சரிவில் வெள்ளி.. இன்றைய நிலவரம்!
Gold Price Increased and Silver Price Decreased | சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
சென்னை, மாச்ர் 27 : ஈரான் மீதான போரை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) உயர்ந்து வந்தது. அந்த வகையில், இன்று (மார்ச் 27, 2026) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி (Silver) கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போர் நிறுத்தத்தால் உயர்வை சந்திக்கும் தங்கம்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மிக கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடி ஈரான் உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பெரும்பாலான உலக நாடுகள், தங்களது எண்ணெய் தேவைகளை ஹோர்முஸ் நீரிணை வழியாக பூர்த்தி செய்து வரும் நிலையில், பல நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு.. ஒரு லிட்டருக்கு இவ்வளவா?




ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக உலக நாடுகள் எண்ணெய் தட்டுப்பாடுகளை எதிர்க்கொண்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையை திறக்க 48 மணி நேரம் கெடு விதித்தார். ஆனால், அது குறித்து ஈரான் கண்டுக்கொள்ளாமல் இருந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தங்கம் விலை சற்று உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து இரு கிராம் ரூ.13,430-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.