AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி’.. இன்று வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் விஜய்!!

Tamilnadu Assembly Election: இதையொட்டி, 234 தொகுதிகளுக்கும் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்கள். இந்த பட்டியலில் 30-க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்களும் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 11 மணிக்கு நடக்க உள்ளது.

‘234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி’.. இன்று வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் விஜய்!!
விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Mar 2026 08:30 AM IST

Tamilnadu Polls 2026: 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டிலும், வேட்பாளர்களை அறிவிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், முதற்கட்ட பிரச்சாரத்தையும் தொடங்கி வருகின்றன. அந்தவகையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக முதல் கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தொடர்ந்து, இன்றைய தினம் 2ம் கட்ட வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. அதேசமயம், ஆளும் கட்சியான திமுக இன்னும் சில நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது. இம்முறை திமுக கூட்டணி மெகா கூட்டணியாக 23 கட்சிகளை கொண்டு அமைந்துள்ளதால், அனைத்து விவகாரத்திலும் அக்கட்சி தாமதம் காட்டி வருகிறது.

இதையும் படிக்க : வரும் தேர்தலில் திமுக மண்ணை கவ்வப்போவது உறுதி – த.வெ.க தலைவர் விஜய்..

தனித்து களம் காணும் தவெக:

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் தவெக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது. ஆட்சியில் பங்கு என்று அதிரடி ஆஃபர்களை அள்ளி வீசியும், தவெக பக்கம் எந்தவொரு சிறு கட்சிகள்கூட செல்லாதது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், அதனை பொருட்படுத்தாது தனித்துப்போட்டி என்று நாம் தமிழர் கட்சியை போல் தனித்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

இன்று வேட்பாளர்கள் அறிவிப்பு:

இதையொட்டி, 234 தொகுதிகளுக்கும் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்கள். இந்த பட்டியலில் 30-க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்களும் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்.

நாளை பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்:

தொடர்ந்து, நாளை (மார்ச் 28) பெரம்பூர் தொகுதியில் இருந்து விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி. நகரில் விஜய் நாளை காலை 11 மணிக்கு பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும், தொடர்ந்து பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 5 இடங்களில் பிரசாரம் மேற்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக விரிவான பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இன்றி பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முறையாக தேர்தல் ஆணையத்திடம் தவெக அனுமதி கோரியுள்ளது. போலீஸ் தரப்பிலும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு டான்ஸ் – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – என்ன நடந்தது?

ஆலோசனை மேற்கொண்ட விஜய்:

இதற்கிடையே, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்தும், பெரம்பூரில் தொடங்கப்படும் பிரசார பயணம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர்கள் தங்கள் வேட்புமனுவை பிழையின்றி நிரப்ப வேண்டும் என்றும், எந்த காரணத்தையும் கொண்டும் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் நிலைக்கு சென்று விடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us