மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்று ஒரேநாளில் அதிரடியாக உயர்வு..
Gold Price: சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமரிக்க சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
Gold price today: கடந்த சில நாட்களாக தடாலடியாக சரிந்து வந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் அதிரடியாக விலை உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதுவும், காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என விலை கடும் ஆட்டம் கண்டு வருகிறது. காலையில் ஒரு விலையை பார்த்து இன்று தங்கம் வாங்கலாம் என திட்டமிட்டு நகைக்கடைக்கு சென்றால், அதற்குள் விலை பல மடங்கு உயர்ந்திருக்கும் நிலையெல்லாம் நடந்து வருகிறது. குறிப்பாக, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக தங்கத்தின் விலை இந்த அளவுக்கு ஆட்டம் கண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: தங்கம் விலை 30% சரிய வாய்ப்பு.. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி கணிப்பு!
இன்றைய தங்கம் விலை நிலவரம்:
அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 80 உயர்ந்து, ஒரு கிராம் 13,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 உயர்ந்து, ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், வெள்ளி விலையில் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. முகூர்த்த நாட்கள் வரும் நிலையில், இந்தத் திடீர் விலை உயர்வு நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
விலை உயர்வுக்கு இடையே ஆறுதல்:
என்னதான் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்திற்குள்ளேயே சுற்றி வருகிறது. நேற்று மட்டுமே காலை மாலை என 2 வேளையும் தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் அதிரடியாக சரிந்தது. நேற்றைய மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.13,350க்கும், சவரனுக்கு ரூ.2,560 குறைந்து ரூ.1,06,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிக்க: வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் சிக்கல்?.. நேரடி வரிகள் வாரியம் கூறுவது என்ன?
போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம்:
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமரிக்க சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் நிச்சமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.