Gold price: தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு.. இன்றைய நிலவரம்..
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு சரிந்து, முதலீட்டாளர்கள், நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி அளித்த நிலையில், கடந்த 2 நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது. அந்தவகையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
Gold Price today: இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு சரிந்து, முதலீட்டாளர்கள், நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி அளித்த நிலையில், கடந்த 2 நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது. அந்தவகையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இவ்வாறு, சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதுவும், காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாத உயரத்திற்கு சென்று விட்டது.
இதையும் படிக்க: தங்கம் விலை 30% சரிய வாய்ப்பு.. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி கணிப்பு!
இன்றைய தங்கம் விலை நிலவரம்:
அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 70 உயர்ந்து, ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 உயர்ந்து, ஒரு சவரன் 1,09,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த வாரத்தில் தங்கம் விலை:
வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமை காலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்து, ஓரு சவரன் ரூ.1,03,600-க்கும், பின்னர் பிற்பகலில் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.2,240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,360க்கும் விற்பனையானது. ஒரு நாளில் இருமுறை அடுத்தடுத்த தங்கம் விலை குறைந்தது.
இதன் பின்னர், ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 15% குறைந்த நிலையில், திங்கட்கிழமை மாலையே மூன்றாவது முறையாக தங்கத்தின் விலை மாறியது. அதன்படி, இரண்டு முறை குறைந்த விலை, 3வது முறையாக விலை கடுமையாக அதிகரித்தது.
இதையும் படிக்க: வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் சிக்கல்?.. நேரடி வரிகள் வாரியம் கூறுவது என்ன?
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை:
தொடர்ந்து, ஒரு கிராம் ரூ.13,340-க்கும், சவரனுக்கு ரூ.1,06,720-க்கும் விற்பனையானது. அதனைத்தொடர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.106,000க்கும், புதன்கிழமை ரூ. 108,800-க்கும் விற்பனையானது. இப்படி, படிப்படியாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.