தங்கத்தின் விலை மீண்டும் தடாலடியாக குறைந்தது.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய நிலவரம்..
Gold Price: நேற்று மாலையில் மூன்றாவது முறையாக விலையில் மாற்றம் ஏற்பட்டு தங்கம் விலை குறைந்த வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 670 உயர்ந்து, ஒரு கிராம் 13,340 ரூபாய்க்கும், சவரனுக்கு 5,360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,06,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Gold price today: நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை 3 முறை மாற்றம் கண்ட நிலையில், இன்று காலை மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்கள், முதலீட்டார்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. அதன்படி, நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் சவரனுக்கு மேலும் 2,240 ரூபாய் என 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,01,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிராம் 12,670 ரூபாயாக சரிந்தது பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், மாலையில் மூன்றாவது முறையாக விலையில் மாற்றம் ஏற்பட்டு தங்கம் விலை குறைந்த வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 670 உயர்ந்து, ஒரு கிராம் 13,340 ரூபாய்க்கும், சவரனுக்கு 5,360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,06,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிக்க: வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் சிக்கல்?.. நேரடி வரிகள் வாரியம் கூறுவது என்ன?
இன்றைய தங்கம் விலை:
அந்தவகையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.340 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,720 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,000 என்ற விலைக்கு வந்துள்ளது. நேற்று இரவு ஒரு சவரன் 1,06,720க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று காலை ஏற்பட்டுள்ள சரிவு நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தாலும், அடுத்து விலை உயருமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
வெள்ளி விலையும் கடும் வீழ்ச்சி:
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.250-க்கு விற்கப்பட்ட வெள்ளி, இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,40,000 ஆக உள்ளது.
இதையும் படிக்க: தங்கம் விலை 30% சரிய வாய்ப்பு.. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி கணிப்பு!
போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம்:
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமரிக்க சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் நிச்சமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.