Gold Price : பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. ஒரே நாளில் ரூ.7,600 சரிந்த தங்கம் விலை!
Gold and Silver Price Reduced | சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், மதியம் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை குறைந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, மார்ச் 23 : சென்னையில் இன்று (மார்ச் 23, 2026) காலை தங்கம் விலை (Gold Price) அதிரடியாக குறைந்த நிலையில், மதியம் மீண்டும் விலை குறைந்துள்ளது. காலையில், தங்கம் கிராமுக்கு ரூ.670 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.280 குறைந்துள்ளது. இந்த நிலையில், தங்கம் இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை குறைந்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கம் விலை எதிரொலிக்கும் மத்திய கிழக்கு சிக்கல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சில நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி வழங்கினாலும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதையும் படிங்க : மாதம் ரூ.20,000 வருமானம்.. கடைசி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழலாம்.. அசத்தல் திட்டம்!
இதனால் உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் எண்ணெய் பக்கம் சாய்ந்துள்ளது. இதன் காரணமாக சமீப காலமாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று லாபம் பார்த்து வருகின்றனர். இவற்றின் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.
காலையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
சென்னையில் இன்று காலை 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.670 குறைந்து ஒரு கிராம் ரூ.12,950-க்கும், சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,03,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.235-க்கு, ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : ரூ.5 லட்சம் வரை ஈஸியா பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.. EPFO 3.0-ன் முக்கிய அம்சம்!
ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை
சென்னையில் இன்று காலை தங்கம் விலை குறைந்த நிலையில், மதியம் இரண்டாவது முறையாக விலை குறைந்துள்ளது. அதாவது 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.280 குறைந்து ஒரு கிராம் ரூ.12,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.