AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரேநாளில் தங்கம் விலை கடும் சரிவு.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய விலை நிலவரம்!!

Gold Prices Sharp Decline: யாரும் எதிர்பாராத விதமாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக மார்ச் மாதத்தில் தங்கத்தின் விலை கடுமையாகச் சரிந்து வருகிறது. அதனால், தங்கம் வாங்க விரும்புவோருக்கு இதுவே சரியான நேரமாகத் தெரிகிறது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.

ஒரேநாளில் தங்கம் விலை கடும் சரிவு.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய விலை நிலவரம்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Mar 2026 11:12 AM IST

சென்னை, மார்ச் 23: 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை, தற்போது தலைகீழாக விலை குறைந்து வருகிறது. பிப்ரவரி மாத கடைசியில் ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் உச்சம் தொடங்கிய நிலையில், தங்கத்தின் விலை சவரன் 2 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக மார்ச் மாதத்தில் தங்கத்தின் விலை கடுமையாகச் சரிந்து வருகிறது. அதனால், தங்கம் வாங்க விரும்புவோருக்கு இதுவே சரியான நேரமாகத் தெரிகிறது. குறிப்பாக பண்டிகை மற்றும் திருமண காலத்திற்கு முன்னதாக ஏற்படும் இந்த விலை வீழ்ச்சி, நுகர்வோருக்கு ஒரு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இதையும் படிங்க: பெண்களுக்கு அதிக லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

இன்றைய தங்கம் விலை:

அந்தவகையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.5,360 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,03,600 என்ற விலைக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1,08,960-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

வெள்ளி விலையும் கடும் வீழ்ச்சி:

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.250-க்கு விற்கப்பட்ட வெள்ளி, இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,35,000 ஆக உள்ளது.

இதையும் படிக்க: தங்கம் விலை 30% சரிய வாய்ப்பு.. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி கணிப்பு!

சர்வதேச அளவில் தங்கம் விலை கடும் சரிவு:

சர்வதேச சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கடுமையாகச் சரிந்தன. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,497 ஆகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை $67 ஆகவும் வர்த்தகமாகிறது. இந்த விலை வீழ்ச்சிக்கு சர்வதேச நிகழ்வுகளே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்கள் உலகளாவிய சந்தைகளைப் பாதிக்கின்றன. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான போர் பதட்டங்களும், அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் மீதான நிச்சயமற்ற தன்மையும் முதலீட்டாளர்களின் மனநிலையைப் பாதிக்கின்றன.

Follow Us