AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ரூ.2,640 சரிவு!

Gold and Silver Price In Chennai | தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ரூ.2,640 சரிவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Mar 2026 10:43 AM IST

சென்னை, மார்ச் 21 : தங்கம் விலை (Gold Price) தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று (மார்ச் 21, 2026) அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.330 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை (Silver Price) கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போர் எதிரொலி – தங்கம், வெள்ளி விலை சரிவு

2026, ஜனவரி மாத தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை தற்போது கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் போர் காரணமாக உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தில் இருந்து திசை திரும்பியுள்ளது, ஏற்கனவே தங்கத்தை வாங்கி வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று லாபம் பார்த்தது ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ2,640 சரிந்துள்ளது.

இதையும் படிங்க : ஆதாரில் இந்த விவரங்களை ஒருமுறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும்.. என்ன என்ன தெரியுமா?

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
12 மார்ச் 2026 ரூ.14,970 ரூ.1,19,760
13 மார்ச் 2026 ரூ.14,900 ரூ.1,19,200
14 மார்ச் 2026 ரூ.14,760 ரூ.1,18,080
15 மார்ச் 2026 ரூ.14,760 ரூ.1,18,080
16 மார்ச் 2026 ரூ.14,710 ரூ.1,17,680
17 மார்ச் 2026 ரூ.14,650 ரூ.1,17,200
18 மார்ச் 2026 ரூ.14,570 ரூ.1,16,560
19 மார்ச் 2026 ரூ.13,900 ரூ.1,11,200
20 மார்ச் 2026 ரூ.13,950 ரூ.1,11,600
21 மார்ச் 2026 ரூ.13,620 ரூ.1,08,960

இதையும் படிங்க : பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620-க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, தங்கம் சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,960-க்கும், வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2026, ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த தங்கம் ரூ.17,000-த்தை நெருங்கி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து ரூ.13,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இவ்வாறு தொடர் சரிவை சந்தித்து வருவது சாமானிய மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us