தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா?

Final Electoral Roll : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது பிப்ரவரி 23 அன்று வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் - எப்போது தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

15 Feb 2026 15:24 PM

 IST

சென்னை, பிப்ரவரி 15 : தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 17, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது வருகிற பிப்ரவரி 23, 2026 அன்று வெளியிப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்புகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம்

இதனையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17, 2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ஒரு வாரம் தாமதமாக பிப்ரவரி 23, 2026 அன்று வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், உச்சநீதிமன்றத்தால் கடந்த ஜனவரி 29, 2026 அன்று வழங்கப்பட்ட உத்தரவுகளின் படி,முரண்பாடுகள் என்ற பரிவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் பட்டியலை கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், பொது இடங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியது.

இதையும் படிக்க : சென்னையில் ரயில் தண்டவாளத்தை கடத்த முயன்ற 384 பேர் மீது வழக்கு.. பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை!

முரண்பாடுகள் பிரிவில் உள்ள நபர்கள், பட்டியல் வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் உரிய விளக்கத்துடன் தங்களது ஆவணங்களை வாக்குசாவடி முகவர்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாக சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. தற்போது எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி 23, 2026 அன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் தொடர்பான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

இதையும் படிக்க : அமித்ஷா கூட்டத்தில் அத்துமீறி பறந்த டிரோன்.. சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு அதிகாரிகள்.. காரைக்காலில் பரபரப்பு!!

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இதன் ஒரு பகுதியாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த டிசம்பர்16, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்பட்டது. அதன் படி புதுச்சேரி, காரைக்கால் உட்பட மொத்தம் 30 தொகுதிகளில் தற்போது 9,44,211 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,43,595 ஆண்கள், 5,00,477 பெண்கள் மற்றும் 139 மூன்றாம் பாலினத்தர்கள் இடம் பெற்றிருந்தனர். மேலும் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?